தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாநிலம் தழுவிய ஆர்பாட்டம்...
அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக கொரோன நோய் தொற்று காலம் முழுமைக்கும் விவசாயத் தொழிலாளர்கள் குடும்பத்திற்க்கு மாதம் ஓன்றுக்கு ரூ7500 நிவாரணம் வழங்கிடவும்,
நுண்நிதி நிறுவன கடன்களை மத்திய. மாநில அரசே ஏற்று தள்ளுபடி செய்திடவும்,
கூட்டுறவு மற்றும் தேசிய மயமாக்கபட்ட வங்கிகள் முலம் சுய உதவிக் குழுக்ககளுக்கு மானியத்துடன் கடன் வழங்கிடவும்,
60 வயது நிறைவடைந்த முதியோர் அனைவருக்கும் மாதம் ரூ3000 ஓய்வுதியம் வழங்கிட கோரியும் தென்காசி மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் மாநில தழுவிய ஆர்பாட்டம், கணபதி விதொச மாநில குழு உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது ராமமூர்த்தி, லெனின்குமார், கணபதி, வேலம்மாள், புஷ்பா முன்னிலை வகித்தனர், கோரிக்கையினை விளக்கி வேல்முருகன் Citu மாவட்ட தலைவர் சிறப்புரையாற்றினார், போராட்டத்தில் கிருஷ்ணன் Citu வட்டார செயலாளர், வள்ளிநாயகம் ex MC விச பொருளாளர் ராமசாமி மற்றும் 50க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்ட செய்தியாளர்
A. கோவிந்தராஜ்
No comments:
Post a Comment