சதுரங்கப்பட்டினம் கிராமத்தில் ஆர்சனிக் ஆல்பம் 30C ஹோமியோபதி மருந்து மற்றும் கபசுர குடிநீர் தேசிய இலஞ்ச ஊழல் கண்காணிப்பு குழு மற்றும் மக்கள் உரிமை இயக்கம் சார்பாக வழங்கல்...
சதுரங்கப்பட்டினம் கிராமத்தில் முதல் கட்டமாக 600 குடும்பங்களுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தமிழக அரசால் பரிந்துரை செய்யப்பட்ட ஆர்சனிக் ஆல்பம் 30C ஹோமியோபதி மருந்து மற்றும் கபசுர குடிநீர் தேசிய இலஞ்ச ஊழல் கண்காணிப்பு குழு மற்றும் மக்கள் உரிமை இயக்க உறுப்பினர்கள் சார்பாக வழங்கப்பட்டது செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம் சதுரங்கப்பட்டினம் கிராமத்தில் முதற்கட்டமாக 600 குடும்பங்களுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆர்சனிக் ஆல்பம் 30C ஹோமியோபதி மருந்து தேசிய லஞ்ச ஊழல் கண்காணிப்பு குழு மற்றும் மக்கள் உரிமை இயக்க சதுரங்கப்பட்டினம் உறுப்பினர்களால் சதுரங்கப்பட்டினம் மீனவர் பகுதி (வடக்கு மற்றும் தெற்கு), யாதவர் தெரு, சமத்துவ தெரு, மார்க்கெட் தெரு மற்றும் மசூதி தெருவில் உள்ள குடும்பங்களுக்கு வீடு வீடாக வினியோகம் செய்யப்பட்டது.
மேலும் சதுரங்கப்பட்டினம் மீனவர் பகுதி(வடக்கு மற்றும் தெற்கு) பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. மேலும் அடுத்தடுத்த கட்டங்களில் சதுரங்கப்பட்டினம் பகுதியிலுள்ள அனைத்து மக்களுக்கும் ஆர்சனிக் ஆல்பம் 30C மற்றும் கபசுர குடிநீர் வழங்க முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிகழ்வில் சதுரங்கப்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் திரு மனோகரன், டாக்டர் திரு பாலசுப்பிரமணியன், திரு கிருஷ்ணகுமார், சமூக ஆர்வலர்கள் மற்றும் தேசிய லஞ்ச ஊழல் கண்காணிப்பு குழு மற்றும் மக்கள் உரிமை இயக்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
A. இரஹமதுல்லா, கல்பாக்கம்.
No comments:
Post a Comment