செங்கல்பட்டு மாவட்டத்தில் தேசிய லஞ்ச ஊழல் கண்காணிப்பு குழுவினரின் கோரிக்கையை நிறைவேற்றிய மின்சாரத்துறை அதிகாரிகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் தேசிய லஞ்ச ஊழல் கண்காணிப்பு குழுவினரின் கோரிக்கையை நிறைவேற்றிய மின்சாரத்துறை அதிகாரிகள்...


செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம் மகாபலிபுரம் பேரூராட்சி எடையூர் பஞ்சாயத்து கொகில மேடு ஊராட்சியில்  நெடுநாட்களாக பழுதடைந்து மக்களுக்கு இடையூறாக இருந்து வந்த 2 மின் கம்பங்களை மாற்ற வேண்டி தமிழ்நாடு மின்சார வாரிய மகாபலிபுரம் உதவி செயற்பொறியாளர் செந்தில்குமாருக்கு மொபைல் வழி கோரிக்கை தேசிய லஞ்ச ஊழல் கண்காணிப்பு குழு மற்றும் மக்கள் உரிமை இயக்கம் சதுரங்கப்பட்டினம் உறுப்பினர்கள் சார்பாக அனுப்பப்பட்டது. இந்தக் குரானா பொது முடக்க காலத்திலும் துரிதமாக செயல்பட்டு 2 மின் கம்பங்களை உடனடியாக மாற்றி அக்கிராம மக்களுக்கு உதவி செய்த தமிழ்நாடு மின்சார வாரிய செங்கல்பட்டு மாவட்ட செயற்பொறியாளர் மனோகரன் செந்தில்குமார் உதவி பொறியாளர் மகாபலிபுரம் மற்றும் உதவி பொறியாளர் வினோத்குமார் ஆகியோர்களுக்கு பொதுமக்களும் லஞ்ச ஊழல் எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் நன்றி தெரிவித்தனர்,


இம்மாதிரியான பொது முடக்க காலத்திலும் துரிதமாக செயல்படும் அரசு அதிகாரிகளை சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.


அ.ரஹமதுல்லா


நிருபர், கல்பாக்கம்.


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...