தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் மேற்கு ஒன்றியம் குணராம நல்லூர் ஊராட்சி மத்தளம்பாறையில் தலைவர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவி..
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் மேற்கு ஒன்றியம் குணராம நல்லூர் ஊராட்சி மத்தளம்பாறையில் தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார் அவைத்தலைவர் காசிமணி, மாவட்ட மகளீர் தொண்டரணி துணை அமைப்பாளர் முத்துலதா, ஊராட்சி செயலாளர் முருகேசன் தங்கையா, ஜீவகன், ஆத்தியப்பன், தீன், ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர் முன்னாள் ஊராட்சி துணை தலைவர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் 250 குடும்பங்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் கல்லூரணி ஊராட்சி செயலாளர் சீனித்துரை ஒன்றிய வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் கபில்தேவதாஸ் ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் அருள் ஜூலியஸ் , முத்துராஜ், பொன்னுத்துரை, கருப்பசாமி, மற்றும் பலர் கலந்துகொண்டனர் செல்வம் நன்றி கூறினார்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் A.கோவிந்தராஜ்.
No comments:
Post a Comment