தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் புதிதாக கட்டப்பட்ட சார்பதிவாளர் கட்டட திறப்பு விழா கட்சிப் பாகுபாடின்றி அனைவரும் பங்கேற்பு...
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் புதிதாக கட்டப்பட்ட சார்பதிவாளர் கட்டட திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கட்சிப் பாகுபாடின்றி அனைவரும் கலந்துகொண்டனர். ரூபாய் 90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கட்டடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் இதைத்தொடர்ந்து கடையநல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சியில் கடையநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் முகமது அபூபக்கர் (முஸ்லிம் லீக்), கடையநல்லூர் நகர அதிமுக செயலர் எம் கே முருகன், கடையநல்லூர் ஒன்றிய செயலர் முத்துப்பாண்டியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் சையது சுலைமான், மாவட்டச் செயலர் இக்பால், நகர தலைவர் சையது மசூது, தொகுதி அமைப்பாளர் ஹைதர்அலி, மண்டல இளைஞரணி செயலர் கடாபி, மாநில இளைஞரணி துணைத்தலைவர் ஹபிபுல்லா, கடையநல்லூர் ஒன்றிய திமுக செயலர் செல்லத்துரை, அதிமுக நிர்வாகிகள் கருப்பையாதாஸ் ஜெயமாலன், அழகர்சாமி நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலர் முனியசாமி, திமுக பெருமாள்துரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ராஜசேகரன், சார்பதிவாளர் கஸ்தூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் A.கோவிந்தராஜ்.
No comments:
Post a Comment