தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா அழகுநேரி கிராமத்தில் நூலகம் திறப்பு...
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா அழகுநேரி கிராமத்தில் நூலகம் திறப்பு விழாவிற்கு சிவகிரி தலைமையிடத்து வட்டாட்சியர் மைதீன் பட்டாணி திருவேங்கடம் துணை தாசில்தார் ரவி கணேஷ்,அழகுநேரி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் , ம.தி. மு. க கட்சி தலைவர்கள்,அரசியல் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள், காவல்துறையில் பணிபுரியும் நண்பர்கள் ,பெரியோர்கள்,பெண்கள் , இளைஞர்கள், படித்த பட்டதாரி நண்பர்கள் கலந்து கொண்டார்கள். நூலகம் வெகு சிறப்பாக கர ஓசையோடு மங்களம் பொங்க, குத்து விளக்கு ஏற்றி திறந்து வைக்கப்பட்டது. புதிய நூலகத்தில் ஏழை எளிய பொது மக்கள் பயன்படும் வகையில் செயல்பட தொடங்கி வைக்கப்பட்டது அழகுநேரி கண்ணன் அவர்கள் நூலகம் திறப்பு விழாவில் வருகை தந்த அனைவருக்கும் சானிட்டிசர் உபயோகபடுத்தியும் மாஸ்க் இலவசமாக கொடுத்து அரிசி பைகள்,காய் கறிகள் பைகள் சானிட்டிசர் பாட்டில்கள்,மாஸ்க் கைஉறைகள் பொது மக்களுக்கு இலவசமாக வழங்கினார்.மேலும் சமூக இடைவெளி பின்பற்றப்பட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி மாவட்ட செய்தியாளர், கோவிந்தராஜ்.
No comments:
Post a Comment