தென்காசி மாவட்டம் கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி

தென்காசி மாவட்டம் கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி..



திருவேங்கடம் தாலுகா குருவிகுளம் வட்டார பகுதிகளில் கொரொனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு புத்தாக்க  பயிற்சி நடைபெற்றது.இதில் தென்காசி  மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் படி, துணை இயக்குநர் சுகாதார பணிகள் சங்கரன்கோவில் மருந்துவர் கலுசிவலிங்கம் ஆலோசனையின் பேரில் திருவேங்கடம் வட்டம், குருவிகுளம் வட்டார பகுதிகளில் கொரொனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் திருவேங்கடம் சமுதாய நலக்கூடத்தில் வைத்து புத்தக்க பயிற்சி நடைபெற்றது. குருவிகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் கணபதி தலைமை தாங்கி கொசு ஒழிப்பு, பணியாளர்களுக்கு கொரானா, டெங்கு சம்பந்தமாக விரிவாக எடுத்துரைத்தார். பின்னர் வட்டார மருத்துவ அலுவலர் மகேஸ்வரன் கலந்து கொண்டு கொரொனா தடுப்பு பணிகள் குறித்து பணியாளர்களுக்கு எடுத்து கூறினார். பின்னர் கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கும்,தூய்மை காவலர்களுக்கு விரிவான விளக்கமும், செயல் முறைகளும் கூறப்பட்டது. நிகழ்ச்சியில் கலிங்கபட்டி அரசு ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் கார்த்திக் குமார், திருவேங்கடம் பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவா,குருவிகுளம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பெருமாள், சுகாதார ஆய்வாளர்கள் சின்னதம்பி, கமலநாதன், குருமூர்த்தி ,கொசு ஒழிப்பு பணியாளர்கள் பாலமுருகன், முருகையா மற்றும் போரூரட்சி, ஊராட்சி, சுகாதார துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


 


தென்காசி மாவட்ட தலைமை செய்தியாளர் A. கோவிந்தராஜ்.


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...