விவசாயிகள் விவசாய நிலத்திற்க்கு தேவையான வண்டல்மண், கரம்பைமண் எடுக்க அரசு அனுமதி வழங்க கோரிக்கை

விவசாயிகள் விவசாய நிலத்திற்க்கு தேவையான வண்டல்மண், கரம்பைமண் எடுக்க அரசு அனுமதி வழங்க கோரிக்கை..



தென்காசி மாவட்டத்தில் விவசாயமே பிரதான தொழில் ஆகும். விவசாயம் சார்ந்த விவசாய தொழிலாளர்கள் அதிகம் வசித்து வருகிறார்கள்.  நமது மாவட்டத்தில் பெரும்பான்மையான குளங்கள் பொதுப் பணித்துறைக்கு சொந்தமான குளமாகவும் மற்ற குளங்கள் அந்தந்த பகுதி ஊராட்சி ஒன்றியங்கள் கட்டுப்பாட்டிலும் இருந்துவருகிறது  தற்போது ஒரு குறிப்பிட்ட பகுதிகளில வெங்காயம் பயிர்செய்து எடுத்துள்ளார்கள் சில பகுதிகளில் பணப்பயிர்கள் பயிரிட்டுள்ளார்கள். பொதுவாக கடந்த வருடம் ஜூன், ஜூலை, ஆகஸ்ட், மாதங்களில விவசாயிகள் விவசாய நிலத்திற்கு தேவையான வண்டல்மண், கரம்பல் மண் எடுக்க மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்து இருந்தார்கள் குறிப்பிடக்தக்கது  காரணம் செப்டம்பர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிடும் குளங்கள் பெருகிவிடும் அதனால் அதற்கு முன்பே அனுமதி வழங்குவது வாடிக்கையாக இருந்து வந்துள்ளது  தற்போது நமது மாவட்டத்தில் சில குளங்களில் பொதுப் பணித்துறையின் மூலம் குடிமராமத்துப் பணிகள் நடந்துவருகிறது அந்த குளங்களைத் தவிர்த்து மற்ற குளங்களில் வண்டல்மண், கரம்பல் மண் எடுக்க அனுமதி வழங்கினால் விவசாயிகள் பயன்பெறுவார்கள்.  பக்கத்து மாவட்டமான நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில வண்டல்மண், கரம்பல் மண் எடுத்திட விவசாயிகளுக்கு ஆட்சியர்கள் அனுமதி வழங்கியுள்ளார்கள். ஆகவே விவசாயிகள் நலன்கருதி நமது மாவட்டத்தில் இதுவரையில் பாஸ் வழங்கப்படவில்லை அதனால் தங்களிடமும் விவசாயிகள் பாஸ் வழங்க வேண்டி விண்ணப்பம் செய்து கோரிக்கை வைத்துள்ளார்கள்.  ஆகையால் மாவட்ட ஆட்சியர் அவர்கள் விவசாயிகளின் மீது கருணைகொண்டு வண்டல்மண் , கரம்பல் மண் எடுத்திட அனுமதி வழங்கிட விவசாய சார்பில் சமுக ஆர்வலரும் மூத்த பத்திரிக்கையாளர் மாரியப்பன் கோரிக்கை வைத்து உள்ளார்.


 


கோவிந்தராஜ், மாவட்ட செய்தியாளர் தென்காசி.


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...