ஈரோடு மாவட்டத்தில் தொடர் சாரல் மழையால் மண்பாண்டத் தொழில் பாதிப்பு...
ஈரோடு மாவட்டம் அந்தியூர் சென்னம்பட்டி பூனாட்சி சித்தார் குட்டை முனியப்பன் கோவில் பவானி அம்மாபேட்டை சிங்கம்பேட்டை நெருஞ்சிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பூதப்பாடி சே கண்டியூர் தொடர் சாரல் மழையால் மண்பாண்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மண்பாண்ட தொழிலாளர்கள் கோவில் திருவிழாக்களுக்கு தேவையான மண்பானைகள் சாமி சிலைகள் மண்குதிரை மண் பசு மண் அடுப்பு அகல் விளக்குகள் உள்ளிட்ட மண்பாண்ட பொருட்கள் அதிகளவில் தயாரித்து வர்ணம் பூசி ஈரோடு சேலம் கோவை நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் விற்பனை செய்து வருகின்றனர். மேலும் உள்ளூர் பகுதிகளில் நடைபெறும் கோவில் திருவிழாக்களுக்கு பொங்கல் வைக்க தேவையான மண்பானைகள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர் இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா ஊரடங்கால் மண்பாண்டத் தொழிலை கைவிட்டு வீட்டில் வருமானம் இன்றி முடங்கி கிடந்தனர் இந்நிலையில் அரசு ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தியதால் மண்பாண்ட தொழிலாளர்கள் மீண்டும் மண்பாண்ட பொருட்கள் தயாரிக்கும் தொழில் செய்து வந்தனர் இந்நிலையில் தற்போது ஈரோடு பகுதியில் தொடர் சாரல் மழை பெய்து வருவதால் மண்பாண்ட பொருட்கள் வெயிலில் உலர்த்த முடியாமல் கவலையடைந்துள்ளனர்.
கே .மணிகண்டன்
ஈரோடு மாவட்ட செய்தியாளர்.
No comments:
Post a Comment