8 போலிசாரை சுட்டுக்கொன்ற ரவுடிகளின் தலைவன் டான் விகாஷ் துபே உஜ்ஜயினி கோயிலில் கைது

உஜ்ஜயினி கோயிலில் தாதா விகாஷ் துபே என்கவுன்டர் பயத்தில் சரண்டரா?


அல்லது காவல்துறை சுற்றி வளைத்து பிடித்ததா?



கான்பூர் தாதா விகாஷ் துபே உஜ்ஜயினி கோவில் சாமி கும்பிட பூஜை பொருளுடன் கோவிலுக்குள் செல்வதாக கடை வைத்திருக்கும் ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் தாதாவை சுற்றி வளைத்தது காவல்துறை என்றும் அப்போது விகாஷ் துபே நான் கான்பூர்காரன் என்று கர்ஜித்ததாகவும் தகவல் பரபரப்பாய் பேசப்பட்டு வருகிறது,


கடந்த வாரத்தில் கான்பூர் அருகே பிக்ரு கிராமத்தில் டி.எஸ்.பி உள்ளிட்ட 8 போலீஸாரை விகாஷ் துபே தாதாவின் கும்பல் சுட்டுக் கொன்றது. அது முதலே, விகாஷ் துபே கும்பலை உத்தரபிரதேச போலீஸார் வேட்டையாடி வருகின்றனர். விகாஷ் துபேவின் கூட்டாளிகள் மூன்று பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


போலீஸிடத்தில் பிடிபடாமல் தாதா விகாஷ் துபே இருந்து வந்தார், பரீதாபாத்தில் ஹோட்டலில் தங்கியிருந்த விகாஷ் துபே நேற்று தப்பினார். இதையடுத்து, மத்திய பிரதேசத்தில் உஜ்ஜயினி மகாகாலஸ்வரர் கோயிலில் வைத்து தாதா விகாஷ் துபேவை போலீஸார் கைது செய்துள்ளனர்.


தாதா விகாஷ் துபே கைது சம்மந்மாக இரு வேறு கருத்துக்களை நம்மால் காண முடிகிறது,  அவை உஜ்ஜயினி கோவிலுக்கு சாமி கும்பிட சிறப்பு அனுமதி அட்டையுடன் பூஜை பொருட்கள் வாங்கி கொண்டு செல்வதாக கடைக்காரர் ஒருவர் கொடுத்த தகவலின் படி காவல்துறை அவரை சுற்றி வளைத்து அடையாள அட்டை காண்பிக்க சொன்னா போது ஃபால் என்கிற பெயருடைய அடையாள அட்டை காண்பித்ததாகவும் கிருஸ்தவ பெயருள்ளவர் பூஜை சாமனுடன் செல்ல வாய்ப்பில்லை அதனால் கடைகாரர் கொடுத்த தகவலை உறுதி செய்து காவல்துறை கைது செய்தனர் அப்போது தாதா விகாஷ் துபே நான் கான்பூர் காரன் என்று கர்ஜித்ததாகவும் கூறப்படுகிறது,


அதே சமயத்தில் இனிமேலும் போலீஸாரிடத்தில் போக்கு காட்டினால் தன்னை சுட்டுக் கொன்று விடுவார்கள் என்று பயந்து விகாஷ் துபே போலீஸார் தன்னை கைது செய்து கொள்ளட்டும் என்பதற்காக கோயிலருகே சதாரணமாக திரிந்துள்ளார். கோயில் பாதுகாவலர்களிடத்தில் நான் விகாஷ் துபே கான்பூரிலிருந்து வந்துள்ளேன் என்னை தெரிகிறதா? என்று அவரே  போய் கூறியுள்ளார் அதை தொடர்ந்து போலீஸாருக்கு தகவல் கிடைத்து மத்திய பிரதேச மாநில போலீசார் கோயிலுக்கு வந்து அவரை கைது செய்தனர் என்றும் கூறப்பட்டு வருகிறது.


தாதா விகாஷ் துபே கைதானது குறித்து மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சௌகான் கூறுகையில், குற்றவாளிகள் எவராக இருந்தாலும் மஹாகாலேஸ்வரர் காலடியில் சரணடைந்தாலும் நிச்சயம் அவர் காப்பாற்ற மாட்டார் என்று தெரிவித்துள்ளார்.


சமஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், விகாஷ் துபே சரணடைந்தாரா அல்லது கைது செய்யப்பட்டாரா என்பதை மத்திய அரசு விளக்க வேண்டுமென்று கூறியுள்ளார்.


இந்நிலையில் தாதா விகாஷ் துபே மற்றும் அவரது கூட்டாளிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட காவல்துறையினரின் குடும்பத்தினர் தாதாவின் கூட்டாளிகளை என்கவுண்டரில் சுட்டுக்கொன்றதை போல் சுட்டுக்கொல்லாமல் கைது செய்தது ஏன் என்று வேதனை தெரிவித்து வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது,


தாதா விகாஷ் துபே கைது செய்யப்படுவதற்கு முன் காவல்துறையில் அவருக்கு யாரோ தகவல் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் பரவலாக பேசப்பட்டு வருகிறது, அதே சமயத்தில் அவருடன் சில அரசியல் வாதிகள் தொடர்பு இருக்கக்கூடும் என்றும் அவற்றை பகிரங்கமாக விசாரணை நடத்தி வெளியிட வேண்டும் எனவும் மக்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


 


பா.ரவி,


சிறப்பு ஆசிரியர் - தேசிய மக்களாட்சி.


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...