ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள காவல் நிலையங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கத்துரை நேரில் ஆய்வு...
ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள காவல் நிலையங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி. தங்கத்துரை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஈரோடு மாவட்டத்திற்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி. தங்கதுரை ஈரோட்டின் பல்வேறு பகுதியில் உள்ள காவல் நிலையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார்.
பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு நேரில் சென்று அவர் . புகார்கள் விசாரணை தீர்வுகள் குறித்து அதிகாரியிடம் கேட்டறிந்தார். பவானியில் இருந்து போலீஸாரிடம் பொதுமக்கள் புகார்கள் மீது உரிய விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவித்துள்ளார். தொடர்ந்து சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின் போது. காவல் உதவி ஆய்வாளர் வடிவேல் முருகன் மற்றும் போலீசார் உடன் இருந்தார்.
கே. மணிகண்டன் ஈரோடு மாவட்டம் செய்தியாளர்.
No comments:
Post a Comment