போலி இபாஸ் Duplicate e pass மூலம் உதகை வந்தவர்கள் கைது

போலி இ-பாஸ்(Duplicate e-pass) மூலம் உதகை வந்தவர்கள் கைது!



கடந்த (29/06/2020) இரவு 7:30 மணியளவில் உதகை தாலுக்கா அலுவலகத்திற்கு போலி இ-பாஸ் மூலம் 4 நேபாளிகள் பெங்களூரில் இருந்து உதகைக்கு வந்துள்ளனர் என்று கிடைத்த தகவலின்படி உதகை வட்டாச்சியர் குப்புராஜ் /துணை வட்டாச்சியர் ராஜசேகர் /வருவாய் ஆய்வாளர் பொதிகைநாதன் கிராம நிர்வாக அலுவலர் அருண்ராஜ் ஆகியோர் அதனை ஆய்வு செய்துள்ளனர்.அது உண்மையான தகவல் தான் என்றவுடன் உடனடியாக உதகை  ரோகினி ஜங்சனிலுள்ள இண்டியன் ஆயில் கார்பொரேசனுக்கு சொந்தமான  Holiday Home கெஸ்ட் ஹவுசில் வைத்து ஒரு பெண் உள்பட 4 நபர்களான  ரமேஸ் சர்மா/ஈஸ்வர சர்மா/சந்தோஸ் சர்மா/மணிஷா சர்மா ஆகியோரையும் இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த சமையல்காரர் ராம்பிரசாத் உட்பட 5  நபர்களை உதகை G-1 காவல் நிலைய ஆய்வாளர் திரு. விநாயகம் அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.


விசாரணையில் கொரோனோ லாக்டவுனுக்கு பிறகு கக்கநல்லா செக்போஸ்ட் பகுதியில் கர்நாடகா பகுதியிலிருந்து உதகைக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம் இ-பாஸ் அவசியம் என்பதோடு   கடுமையான ஆய்வுக்கு பிறகே வாகனங்கள் முறையாக விடப்படுவதால் பெங்களூரில் இருந்து போலி இ-பாஸ் மூலம் இவர்கள் உதகை வந்ததாக தெரிய வந்துள்ளது.


மேலும் பெங்களூரில் இருந்து இவர்கள் (KA 04 C 9630)என்ற வாகனத்தில் ரூ 16000 ரூபாய் கொடுத்தே உதகை வந்துள்ளனர். இவர்களை உதகையில் விட்டவுடன் வாகனத்துடன் டிரைவர் ஜெகதீஸ் என்பவர் மாயமாகியுள்ளார். இவர்கள் 4 பேரும் Holiday Home ல் சமையல்காரர்களாய்  உள்ளதாகவும் கணேஷ் ஆரிக்கல் என்ற கான்டிரக்டர் மூலமே இங்கு வந்ததாகவும் கூறியுள்ளனர். இவர்கள் மீது ஆய்வாளர் விநாயகம இந்திய தண்டனை சட்டம் பிரிவுகளான. IPC -Cr.no -806/2020 -ல் 269,417,468,471-ன்  படி  (தொற்றுநோய் பரப்புதல்,ஏமாற்றுதல்,உண்மைக்கு மாறான வகையில் போலி ஆவணம் தயாரித்தல்-(இது பிணையில் வரமுடியாத குற்றம் 7 வருட சிறைதண்டனை) இரவு 11:30 க்கு வழக்கு பதிவும் செய்துள்ளார்.


உடனடியாக இந்த விசயத்தில் வருவாய் துறையினரும் / காவல்துறையினரும் செயல்பட்ட விதம் கண்டு பொதுமக்களும் ,சமூக ஆர்வலர்களும் பாராட்டுகளை வாரி வழங்குகின்றனர்.


A.P. அஸ்மத் அலி


துணை ஆசிரியர், தேசிய மக்களாட்சி.


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...