ஒரு நாட்டின் இறையாண்மைக்கு எதிராக குற்றங்களை புரிந்தால் இந்திய தண்டனை சட்டத்தின்படி எடுக்கப்படும் நடவடிக்கை சிறப்பு பார்வை

 


ஒரு நாட்டின் இறையாண்மைக்கு எதிராக குற்றங்களை புரிந்தால் இந்திய தண்டனை சட்டத்தின்படி எடுக்கப்படும் நடவடிக்கை சிறப்பு பார்வை



ஒரு நாட்டின் இறையாண்மைக்கு எதிராக குற்றங்களை புரிந்தால் இந்திய தண்டனை சட்டத்தின்படி -  விதிகளின்படி அது குற்றமாக கருதப்பட்டு தண்டனை விதிக்கப்படும் சற்று விளக்கமாக பார்க்கலாம்....  I.P.C.121  நமது அரசுக்கு எதிராக சதி செய்து போர் தொடுக்க நினைப்பவர்களுக்கு துணை புரிபவர்களுக்கு இந்த சட்டப்பிரிவின் படி கடுமையான மரண தண்டனை விதிக்கப்படும் இது நிச்சயமாக ஞாயமான பிரிவுதான் ஏனென்றால் தீவிரவாதம் என்பது இன்றைய காலகட்டத்தில் பல விதமான அப்பாவி மக்களின் உயிர்களை பலி வாங்கி கொண்டு இருக்கிறது. இதை மறைமுக போர் என்று கூட கூறலாம் இதற்கு உதாரணமாக சில காலங்களுக்கு முன் மும்பையில் நடந்த அடுக்கடுக்கான குண்டுவெடிப்புகள் பாராளுமன்றத்திற்கு எதிராக நடந்த வன்முறை தாக்குதல்... நமது விமானத் தளத்திற்கு எதிராக நடந்த பயங்கரமான தாக்குதல்... ஆகியவைகளுக்கு...கூட இருந்தே குழி பறிக்கும் நிலையில் நமது நாட்டில் உள்ள சில புல்லுருவிகள் தீவிரவாதிகளுக்கு துணை போய் இருந்தார்கள்...  அவர்களுக்கு நிச்சயம் நாம் மன்னிப்பு கொடுப்போமா அதைத்தான் இந்த இந்திய தண்டனை சட்டம் பிரிவு 121 குறிப்பிடுகிறது. இந்தப் பிரிவை பொறுத்தவரை இந்தியாவுக்கு உள்ளே இருந்துகொண்டு வெளிநாட்டினர் மற்றும் குற்றம் புரிவதற்கு கூட இருந்து சரி செய்வதும் கடுமையான குற்றமாக கருதப்பட்டு ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். ஒரு சதி திட்டத்தினால் நாடு பாதிப்படைந்து இருந்தால் மட்டுமே இந்த சதிக்கு உடந்தையாக இருந்ததற்கு தண்டனை என்று கிடையாது. அந்த சதி திட்டத்தை தீட்டி அமுல்படுத்துவதற்கு முன்பே அது கண்டுபிடிக்கப் பட்டு விட்டாலும் அந்தக் குற்றத்தை திட்டமிட்ட அவர்களுக்கு கூட இருந்து துணை புரிந்தவர்களுக்கும் இந்த தண்டனை..


 


வழக்கறிஞர் G.R.சுரேஷ்குமார்


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...