ரிஷிவந்தியம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரின் மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா தொற்று உறுதி
ரிஷிவந்தியம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரின் மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா தொற்று உறுதி. கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் வசந்தம் கார்த்திகேயன். இவரது மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவனையில் (தனலெட்சுமி சீனிவாசன்) நேற்றுமுன்தினம் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர்களுடன் தொடர்பில் இருந்த உறவினர்கள் ஏழு பேர்களுக்கு கொரானா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவர் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளவை பின்வருமாறு...
நான் நலமாக உள்ளேன் எனது மனைவியும் மகளும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உண்மை அவர்கள் மருத்துவமனையில் உள்ளார்கள்...... நானும் எனது குடும்பத்தைச் சார்ந்த மற்றவர்களும் நலமாக உள்ளோம்..... நண்பர்களும், கழக தோழர்களும், நிர்வாகிகளும் என்மீது அளவற்ற அன்பு கொண்டவர்கள் என்பதை நானறிவேன்... தயவுசெய்து என்னை தொலைபேசியில் தொடர்புகொள்வதை ஒரு சில நாட்கள் தவிர்க்கவும்.... என்றென்றும் மக்கள் பணியில் வசந்தம் க.கார்த்திகேயன், ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
இவ்வாறு தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்
பா.ரவி,
பொறுப்பாசிரியர், தேசிய மக்களாட்சி.
No comments:
Post a Comment