புளியங்குடி நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக சுகாதாரத்துறை அமைச்சருக்கு கோரிக்கை
தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சி அரசு மருத்துவமனைக்கு அடிப்படை அவசியத் தேவைகளை நிறைவேற்ற வேண்டி தமிழக அரசின் சுகாதாரத்துறை அமைச்சருக்கு புளியங்குடி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவரும் முன்னாள் நகர்மன்ற உறுப்பினருமான V.பால்ராஜ் Ex.MC தலைவர் அவர்கள் கோரிக்கை மனு அனுப்பி வைத்தார் தென்காசி மாவட்டம், புளியங்குடி நகராட்சி (வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி _ தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டது) புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு தேவையானவை குறித்து புளியங்குடி நகர மக்கள் மற்றும் சுற்று வட்டார மக்களின் நலன் சார்ந்து புளியங்குடி நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக தங்களின் மேலான கவனத்திற்கு எனது கோரிக்கையை தாங்கள் பரிசீலித்து போர்க்கால அடிப்படையில் மக்களின் நலன் கருதி, நடவடிக்கை எடுத்து அடிப்படை அவசிய தேவைகளை நிறைவேற்றித் தரவும் ஏறத்தாழ நான்கு ஏக்கருக்கு மேல் உள்ள மருத்துவமனை வளாகம். ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் போது புளியங்குடி அரசு மருத்துவமனையில் பிரசவமும், குடும்பநல அறுவை சிகிச்சையும் மாவட்டத்தில் முதலிடம் பெற்று வந்தது. தினமும் 800 முதல் 1000 புறநோயாளிகள் வரும் மருத்துவமனை. 60 படுக்கை வசதிகள் உள்ளது. ஆனால் சமீபகாலமாக புளியங்குடி அரசு மருத்துவமனையின் நிலை வரவர மிகவும் மோசமாகிக் கொண்டே வருகிறது புதிய தென்காசி மாவட்டம் உதயமாகி இம்மாவட்டத்திலுள்ள பெரிய அரசு மருத்துவமனைகளில் ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில் புளியங்குடி அரசு மருத்துவமனையில் தற்போது நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகள்,
1. இம்மருத்துவமனையில் "SCAN" இயந்திரம் இல்லை. ஆகவே மக்கள் நலன் கருதி "SCAN" இயந்திரம் அமைக்க வேண்டும்
2. தூய்மை (துப்பரவு) பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். 6 பணியிடங்களில் ஒரே ஒரு தூய்மை (துப்புரவு) பணியாளர் மட்டுமே வேலை செய்கிறார். 5 பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். 3. மருத்துவமனை பணியாளர் (HOSPITAL WORKER) ஐந்து பேருக்கு இரண்டு பேர் மட்டுமே பணிபுரிகின்றனர்
3 பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்
4. அறுவை சிகிச்சை மருத்துவர் கிடையாது. எனவே அறுவை சிகிச்சை மருத்துவர் நியமித்திட வேண்டும்
5. பிரசவத்திற்கு மருத்துவர் நிரந்தரமாக நியமிக்கப்பட வேண்டும்
6. மயக்க மருத்துவர் நிரந்தரமாக நியமிக்கப்பட வேண்டும்
7.இருக்கின்ற மருத்துவர்களை வேறு இடங்களுக்கு பணி மாற்றம் செய்வதை (DEPUTATION) தவிர்க்க வேண்டும்
8. மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மிக அவசிய தேவை. எனவே ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கிட வேண்டும்
9. புளியங்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் குறிப்பிட்ட சதவீதம் நபர்கள் நரம்புத்தளர்ச்சி நோயால் அவதிப்படுகிறார்கள் இம்மருத்துவமனையில் நரம்புத் தளர்ச்சி மாத்திரைகள் இல்லை நரம்புத் தளர்ச்சி மாத்திரைகள் தட்டுப்பாடு இல்லாமல் தேவையான அளவு இருப்பு வைக்க வேண்டும்.
10.புளியங்குடி நகரில் கல்வி நிறுவனங்கள் அதிகமாக உள்ளது. மாணவ மாணவியர்களுக்கு விபத்துக்கள் மதிய நேரத்தில் ஏற்படும் போது தனியார் மருத்துவமனைகள் மதிய நேரத்தில் இருப்பது இல்லை. அரசு மருத்துவமனையைதான் கல்வி நிறுவனங்கள் நம்பி இருக்க வேண்டியிருக்கிறது. ஆகவே அரசு மருத்துவமனை எந்நேரமும் சிறப்பாக செயல்பட வேண்டும்.
புளியங்குடி நகராட்சியில் ஏறத்தாழ ஒரு லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். மேலும் சுற்று வட்டார மக்களும் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறுகிறார்கள் எனவே மக்களின் நலன் கருதி மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட புளியங்குடி நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை மனு அனுப்பி வைத்துள்ளனர்.
கோவிந்தராஜ்
தென்காசி மாவட்ட செய்தியாளர்
No comments:
Post a Comment