நீலகிரி மாவட்டத்தில் மாணவர்களை மாஸ்க் அணியாததால் சட்ட விரோதமாக முக்கால் மணிநேரம் சட்ட விரோத காவல் மற்றும் அச்சுறுத்திய காவல்துறை நடவடிக்கை எடுக்குமா மாவட்ட காவல்துறை

நீலகிரி மாவட்டத்தில் மாணவர்களை மாஸ்க் அணியாததால் சட்ட விரோதமாக முக்கால் மணிநேரம் சட்ட விரோத காவல் மற்றும் அச்சுறுத்திய காவல்துறை நடவடிக்கை எடுக்குமா மாவட்ட காவல்துறை..


(29/06/2020) மாலை சுமார் 6 மணியளவில் தங்கள் கட்டுபாட்டிலுள்ள தேனாடுகம்பை காவல்நிலைய எல்லைக்குள் வசிக்கும் தருண் S/o செந்தில்குமார் வயது 16, சரத்பாபு S/o ஜெய்சங்கர் வயது 20 என்ற பள்ளியில் படிக்கும் சிறுவர்கள் முகத்திற்கு மாஸ்க் அணியாமல் நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களை கண்ட தேனாடுகம்பை காவல்நிலைய துணை ஆய்வாளர் திரு. செந்தில் என்பவர் சிறுவர்கள் இருவரையும்   காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று மாலை சுமார் 6:15 முதல் 7 மணிவரை  சட்டத்திற்கு புறம்பாக சிறை வைத்து(ILLEGAL CONFINEMENT) அவர்களை கடுமையாக மிரட்டியும்,அச்சுறுத்தியும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளார். இச்சட்டவிரோத செயலை அறிந்த அச்சிறுவர்களின் பெற்றோர்கள் காவல்நிலையத்திற்கு சென்று நியாயம் கேட்டபிறகே சிறுவர்கள் இருவருக்கும் தலா ரூ 50/- என ரூ 100/- னை அபராதம் விதித்து அனுப்பியுள்ளார்.


சாத்தான்குளம் பிரச்சனையே இன்னமும் முடியாமல் காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ள நிலையில் தங்கள் கட்டுபாட்டிலுள்ள காவல்நிலையத்தில் இவ்வாறான ஒரு செயல் நடைப்பெற்று இருப்பது நீலகிரி பொதுமக்களிடையே ஒருவிதமான அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இச்சிறுவர்களை பொறுத்தவரை கொரோனா காலத்தில் சமூக இடைவெளியுடன் கட்டாயம் மாஸ்க் அணியவேண்டும் என்பதை  கூறாத பெற்றோர்களையும் ,அரசு உத்தரவை கடைபிடிக்க தவறிய சிறுவர்களையும் கண்டிப்பாக கண்டிக்க வேண்டியது முறையாக இருப்பினும் அவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்துசென்று கட்டாய சிறை வைப்பு என்பது எல்லாம் சட்டத்தை மதிக்காமல் சட்டத்திற்கு மாறாக தங்கள்  அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது போன்ற செயலாகும்.  சட்டபடியும், அரசு சுட்டிகாட்டியுள்ள விதிகளின்படியும் செயல்படாமல், தமிழக காவல்துறை தலைவர் திரு.திரிபாதி அவர்களின்  வழிகாட்டுதல்களை மீறி இவ்வாறான ஒரு சட்டத்திற்கு புறம்பான செயலை செய்துள்ள தேனாடுகம்பை காவல்நிலைய துணை ஆய்வாளர் திரு.செந்தில் என்பவர்மீது தாங்கள் உடனடியாக துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.


ஒரு காவல் அதிகாரி தவறு செய்தால் அவருக்கு மிக கடுமையான தண்டனையை கொடுக்கவேண்டும் என்பதோடு சட்டத்தை பாதுகாக்க வேண்டிய அவர்களே அவ்வாறான தவறுகளை செய்வதை சட்டத்தால் ஏற்றுகொள்ள முடியாது என்று சமீபத்தில் உச்சநீதிமன்றம் சுட்டிகாட்டியுள்ளதை தங்கள் கனிவான பார்வைக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.


எனவே National Commission and State Commissions for Protection of Child Rights and Children's Courts for providing speedy trial of offences against children or of violation of child rights -ன் விதிமுறைகளை மீறிய காவல்நிலைய துணை ஆய்வாளர்  திரு. செந்தில் அவர்கள் மீது தாங்கள் நடவடிக்கை எடுப்பதோடு மேற்கண்ட நிகழ்வால் மிகுந்த அச்சத்துடனும்,மன உளைச்சலுடனும் உள்ள சிறுவர்களை நேரில் அழைத்து அவர்களின் அச்சத்தை போக்கி அவர்களின் எதிர்கால வாழ்க்கை சரிந்து விடாமல் இருக்க தன்னம்பிக்கையையும்,தைரியத்தையும் கொடுக்க தங்களை கேட்டு கொள்கிறோம்.


A.P.அஸ்மத் அலி


துணை ஆசிரியர் - தேசிய மக்களாட்சி


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...