கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமூக இடைவெளியின்றி வட்டாட்சியர் பணியில் இருக்கும் போதே ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் இருப்பது தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பரவி வருகிறது,
ஊருக்கு மட்டும் தான் உபதேசமா?
சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நடராஜன் பொது மக்களை மாஸ்க் எங்கே என கேட்டு மிரட்டுவதாகவும், சமூக இடைவெளி இல்லாமல் கடைகளில் இருந்தால் அபராதம் விதிப்பதாக கூறி சிறு சிறு கடைகாரா்களிடம் கரார் அதிகாரியை போல வலம் வரும் நிலையில், தனது அலுவலகத்தில் ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் என சமூக இடைவெளியின்றி அவர் அலுவலகத்தில் இருக்கும் போதே அவ்வப்போது குழுமுகின்றனர் அப்போது தெரியாதா சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டிய கடமை அரசு அலுவலகங்களுக்கும் உண்டு என்றும் மேலும் சட்டம் என்பது பொது மக்களை அச்சுருத்த மட்டுமே பயன்படுத்தும் இது போன்ற அதிகாரிகள் தங்கள் அலுவலகத்தில் அரசின் விதிகளை கடைபிடிக்காமலிருப்பது என்பது நாம் தானே அதிகாரி நம்மை யார் கேள்வி கேட்க முடியும் என்கிற மனப்போக்கையே காட்டுவதாக உள்ளது,
அரசின் விதிகளை காற்றில் பறக்கவிட்ட இவர் மீது மாவட்ட ஆட்சியர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் எதிர்பார்க்கின்றனர்,
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அரசின் விதிகளை பின்பற்றாத வட்டாட்சியர் நடராஜன் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பாரா அல்லது கண்டும்காணாதது போல் விட்டுவிடுவாரா என்பதை நாம் பொருத்திருந்தே பார்ப்போம்.
பா.ரவி
சிறப்பு ஆசிரியர் - தேசிய மக்களாட்சி
No comments:
Post a Comment