செங்கல்பட்டு மாவட்டத்தில் சதுரங்கப்பட்டிணம் தேசிய லஞ்ச ஊழல் கண்காணிப்பு குழு மற்றும் தேசிய மக்கள் உரிமை இயக்கத்தினர் மின் வாரிய ஊழியர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கினர்,
சதுரங்கப்பட்டினம் தேசிய லஞ்ச ஊழல் கண்காணிப்பு குழு மற்றும் மக்கள் உரிமை இயக்கம் உறுப்பினர்கள் சார்பாக தமிழ்நாடு மின்வாரிய (சதுரங்கப்பட்டினம்) ஒப்பந்த ஊழியர்கள் 15 நபர்களுக்கு தமிழ்நாடு மின்வாரிய செங்கல்பட்டு மாவட்ட செயற்பொறியாளர் (அமைப்பு மற்றும் பராமரிப்பு) மனோகரன் தலைமையில் மகாபலிபுரம் AD, மற்றும் சதுரங்கப்பட்டினம் AE அவர்கள் கலந்துகொண்டு அரிசி மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பு கொரோனா நிவாரணமாக வழங்கி ஒப்பந்த ஊழியர்களின் மின் பாதுகாப்பு மற்றும் கொரோண பொது பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்வில் தேசிய லஞ்ச ஊழல் கண்காணிப்பு குழு மற்றும் மக்கள் உரிமை இயக்க நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
அ.ரகமத்துல்லா
தேசிய லஞ்ச ஊழல் எதிர்ப்பு கண்காணிப்பு குழு, சதுரங்கப்பட்டினம்
No comments:
Post a Comment