தமிழகத்தில் மனசாட்சி இல்லாத வீட்டு உரிமையாளர்கள்

தமிழகத்தில் மனசாட்சி இல்லாத வீட்டு உரிமையாளர்கள்....


தமிழகத்தில் வாடகைக்கு குடியிருப்பவர்களிடம், வாடகை கட்டவே வழியில்லாத சூழலில் இலவச மின்சாரத்திற்கும் சேர்த்து குறைந்தபட்ச கட்டணம் யூனிட்டுக்கு ரூ.6 முதல் ரூ.10 வரை கூடுதலாக வசூலிக்கின்றனர். மாதம் ஒன்றுக்கு தண்ணீருக்கு குறைந்தபட்சம் ரூ.300 முதல் ரூ.500 வரை பணம்,  வாசலை கூட்ட  குறைந்தபட்சம் மாதம் ஒன்றுக்கு  ரூ.100 முதல் ரூ.1500 வரை  பணம் என கொள்ளையடிக்கின்றனர், வந்தவரை வாழ வைக்கும் தமிழகம் என்று கூறி உழைத்து சம்பாதிக்கும் அப்பாவிகளிடம் கொத்துக் கொத்தாக பணத்தை பிடிங்கிக்கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர் வீட்டு உரிமையாளர்கள். வாடகை வீட்டுக்காரன் எப்படி இருந்தால் நமக்கென்ன மாதம் பிறந்தால்  வாடகை பணம் வருகிறதா என பணத்தை மட்டுமே பார்க்கும்  வீட்டு உரிமையாளர்கள் மனசாட்சி இல்லாதவர்களே கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக வருமானம் இல்லாத விவசாயிகள் கூலி வேலை செய்பவர்கள் மற்றும் வெளி மாவட்டத் தொழிலாளர்கள் வேலைக்கும் செல்லமுடியாத நிலையிலும் சொந்த ஊருக்கும் செல்ல முடியாமலும் வாடகையும் கட்ட முடியாமலும் தவிக்கின்றனர் வாடகை கட்ட சொல்லி தினந்தோறும் வீட்டு உரிமையாளர்கள் வாடகை தாரர்களை மிகவும் துன்புறுத்தி வருகின்றனர்  இவற்றை தமிழக அரசு கவனத்தில் கொண்டு வீட்டு உரிமையாளர்களை எச்சரித்து அறிக்கை வெளியிட வேண்டும் வீட்டு உரிமையாளர்கள் கூடுதலாக கொள்ளையடித்த பணத்தை வாடகைக்கு குடியிருப்பவர்களிடமே மீண்டும் கொடுக்க கடுமையான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


 


A.கோவிந்தராஜ்,


தென்காசி மாவட்ட செய்தியாளர்.


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...