அதிரடி காட்டிய திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் தப்பியோடிய தாசில்தார் ஆர்.ஐ கைது திருச்சியில் பரபரப்பு

அதிரடி காட்டிய திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ்! தப்பியோடிய தாசில்தார்!! ஆர்.ஐ கைது!! திருச்சியில் பரபரப்பு!! 


அதிரடி காட்டிய திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ்! தப்பியோடிய தாசில்தார்!! ஆர்.ஐ கைது!! திருச்சியில் பரபரப்பு!!  திருச்சி மணப்பாறை அருகே தவள வீரன்பட்டியைச் சேர்ந்தவர் சிவாஜிகணேசன். இவர் வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.இவ்வாறு வாரிசு சான்றிதழ் வழங்க சிபாரிசு செய்ய வேண்டும் என்றால் தனக்கு 15000 ஆயிரம் லஞ்சம் வேண்டுமென வருவாய் ஆய்வாளர் ஜோதிமணி கேட்டதாக தெரியவந்துள்ளது.  இதனை சிவாஜிகணேசன் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் சிவாஜிகணேசன் மணப்பாறை தாசில்தார் வந்த நிலையில் திருச்சி லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலும் போலீசார் அதிரடியாக அலுவலகத்திற்குள் சென்றனர்.  போலீசார் வருவதை பார்த்த தாசில்தார் தமிழ்கனி வேறு பாதையில் தப்பியோடிவிட்டார். லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜோதிமணி இருந்த அறைக்குள் சென்று அங்கு சிவாஜிகணேசனும் இருந்ததாக தெரிகிறது. அதே அறையில் உதவியாளர் ராஜேஸ்வரியும் இருந்தார். போலீசார் இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்ட நிலையில் அரை மணி நேரம் கழித்து தாசில்தார் தமிழ் கனி அலுவலகத்திற்குள் வந்தார்.  சுமார் 4 மணிநேர லஞ்ச ஒழிப்பு போலீசார் தாசில்தார் தமிழ்கனி, வருவாய் ஆய்வாளர் ஜோதிமணி, உதவியாளர் ராஜேஸ்வரி ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். V.பெரியபட்டி வருவாய் ஆய்வாளர் ஜோதிமணி கிராம அலுவலக உதவியாளர் ராஜேஸ்வரி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டதாகவும் தொடர்புடைய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.  


A.M.இஸ்மாயில்,


துனை ஆசிரியர்,  திருச்சி.


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...