குன்னூர் ஆப்பில் பீ முதியோர் இல்லம் அருகே சிறுத்தை நடமாட்டம்

குன்னூர் ஆப்பில் பீ முதியோர் இல்லம் அருகே சிறுத்தை நடமாட்டம்...



நீலகிரி மாவட்டம் குன்னூர் ஆப்பிள் பீ முதியோர் இல்லம் அருகில் கடந்த ஒரு மாதமாக சிறுத்தை ஒன்று இரவு நேரங்களில் உலா வருகிறது அந்த பகுதி குடியிருப்புகளுக்குள் புகுந்து வளர்ப்புப் பிராணிகளான. வாத்து  கோழி போன்றவைகளை பிடித்து சென்று விடுகிறது வளர்ப்பு பிராணிகள் எண்ணிக்கை தற்போது வெகுவாக குறைந்துள்ள நிலையில்  அங்குள்ள மக்கள்  மிகுந்த அச்சத்தில் உள்ளதாக கூறுகின்றனர்.  அடுத்து என்ன நடக்கும் என்ற பயத்தில் உள்ள  அவர்கள்  இரவு நேரத்தில் வரும் சிறுத்தையை  அங்குள்ள ஒரு Cctv மூலம் படம்பிடித்து அதனை நமது மக்களாட்சி குழுவினரிடம் கொடுத்துள்ளனர்  .உடனடியாக இதுகுறித்த புகாரினை மக்களாட்சி குழுவினர் மாவட்ட நிர்வாகத்திற்கும் வனதுறை உயரதிகாரிகளுக்கும் தெரிவித்ததில் சம்மந்தப்பட்ட இடத்திற்கு வனத்துறையினர் உடனடியாக செல்லாமல் வழக்கமான பாணியில் தலையை மட்டும் காட்டிவிட்டு வந்துள்ளனர். கடந்த காலங்களில் மனித விலங்கு மோதல் நீலகிரியில் பலமுறை பல இடங்களில்  நடந்ததும்  இதில் முக்கியமாக. கூடலூர் பகுதியில் புலி ஒன்றை பிடிக்க வனத்துறையினருடன்  முன்னால் மாவட்ட ஆட்சிதலைவரே நேரடியாக களத்தில் இறங்கி இரவுபகலாக தூங்காமல் கண்விழித்து அதனை பிடித்ததும்  மனித உயிர்கள் பலவற்றை காப்பாற்றியதையும் நினைவு  கூறும் பொதுமக்கள் இதுபோல ஒரு சம்பவம் நடந்தால் மட்டுமே வனத்துறையினர் அலட்சியம் காட்டாமல் எங்களை காப்பாற்றுவார்கள் போல என்று அழுது கண்ணீர் விடுகின்றனர். இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் திரு குருசாமி தபேலா கூறும்போது தங்களுக்கு கடந்த ஜீன் 3 ஆம் தேதியே தகவல் கிடைத்ததாகவும் குன்னூர் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். வனத்துறையினரின் இந்த அலட்சிய போக்கு மனித உயிர்களை காவு வாங்காமல் இருக்க வேண்டும் என இறைவனிடம் கையேந்துவதை தவிர தற்போது வேறு ஏதும் வழியில்லை,


A.P.அஸ்மத்அலி


முதன்மை ஆசிரியர்


 


 


 


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...