பவானி தீயணைப்பு நிலையத்தில் விழிப்புணர்வு ஓவியப்போட்டி
ஈரோடு மாவட்டம் பவானி தீயணைப்பு நிலையத்தில் விழிப்புணர்வு ஓவியப்போட்டி பவானி தீயணைப்பு நிலையம் வளாகத்தில் பள்ளி மாணவ மாணவியருக்கான கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பு விழிப்புணர்வு ஓவியப் போட்டிகள் இன்று நடைபெற்றது. தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறை சார்பில் நடைபெற்ற போட்டிகளை ஈரோடு மாவட்ட தீயணைப்பு அலுவலர் பி.புளுகாண்டி தொடங்கி வைத்தார். தீயணைப்பு நிலையம் அலுவலர் கே. காந்தி பவானி.எஸ். வேலுச்சாமி. பெருந்துறை.எஸ்.ஜேசுதாஸ். அந்தியூர் ஆகியோர் முன்னிலை வைத்தார். இதில் பவானி மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்று கோரானா வைரஸ் குறித்த ஓவியங்களை வரைந்தார். இப்போட்டியில் பங்கேற்ற மாணவ. மாணவியர் சமூக இட பணியோடு அமர வைக்கப்பட்டனர். அவர்களுக்கு . ஓவியம்வரையந் தேவையான உபகரணங்கள். பிஸ்கட் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து சிறந்த ஓவியங்களுக்குப் பரிசுகளும் போட்டிகள் பங்கேற்றோருக்குச் சான்றுகள் வழங்கப்பட்டன.
கே.மணிகண்டன்,
செய்தியாளர், ஈரோடு மாவட்டம்.
No comments:
Post a Comment