குவைத்தில் இரண்டாம் கட்ட தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது, படிப்படியாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் குவைத்...
குவைத்தில் சுகாதாரத்துறையின் வழிகாட்டுதலின்படி, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 4 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டு இருந்த சில கடைகள், வர்த்தக நிறுவனங்கள், மொபைல் கடைகள், மால்கள் இன்று திறக்கப்பட்டது. குவைத் நகராட்சிதுறை, சுகாதாரத்துறை மற்றும் வணிகத்துறை அதிகாரிகள் இதனை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மேலும் வணிகத்துறை சார்பில் நடத்தப்பட்ட சோதனையில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு பொருள்களை விற்பனை செய்த சில கடைகளும் மூடி சீல் வைக்கப்பட்டது.
செய்தி M.அஸ்லம்பாஷா.
No comments:
Post a Comment