சவூதி அரேபியாவில் நாளை முதல் ஊரடங்கு முற்றிலும் தளர்வு

சவூதி அரேபியாவில் நாளை முதல் ஊரடங்கு முற்றிலும் தளர்வு...


சவூதி அரேபியாவில் நாளை முதல் ஊரடங்கு முற்றிலும் தளர்வு  21/06/2020 ஞாயிற்றுக்கிழமை காலை ஆறு மணி முதல் இராச்சியத்தின் எல்லா மாகாணத்திலும் ஊரடங்கு உத்தரவை முற்றிலுமாக தளர்த்துவதற்கும் பொருளாதார மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது.   உம்ரா, விசிட் மற்றும் சர்வதேச விமானங்களுக்கான தற்காலிக தடை மறு அறிவிப்பு வரும் வரை நீடிக்கப்பட்டுள்ளது.  கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான அரசாங்கத்தால் வரையறுக்கப்பட்ட கோட்பாடுகளான முகக் கவசம் அணிதல், தனிமனித இடைவெளி கடைப்பிடித்தல், பொது இடங்களில் 50 பேருக்கு மேற்பட்டவர்கள் கூடுவதை தவிர்த்தல் போன்றவற்றை தொடர்ந்து பின்பற்றவும் மீறுபவர்களுக்கு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட அபராதம் விதிக்கப்படும் எனவும்  இன்றைய செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகிக்கும் Tawakkalna மற்றும் Sehha செயலியை பதிவிறக்கம் செய்து வழிமுறைகளை அறிந்து கொள்ளவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


 


பா.ரவி


சிறப்பு ஆசிரியர் - தேசிய மக்களாட்சி.


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...