வனத்துறையின் அலட்சியமும்?? பொதுமக்களின் அச்சமும் !!
குன்னூர் ஆப்பிள்பீ பகுதி மற்றும் மேல் வண்ணாரபேட்டை பகுதியில் பல்லாயிரகணக்கான. மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஒரு முதியோர் இல்லமும் உள்ளது. இதன் அருகில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான காட்டு பகுதியிலிருந்து அடிக்கடி காட்டு விலங்குகளின் நடமாட்டம் இருந்து வந்ததால் மக்கள் எப்போதும் ஒரு வகை அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர் . இதுகுறித்து பலமுறை குன்னூர் வனதுறையினருக்கு இப்பகுதி மக்கள் தெரிவித்தும் பலனில்லை. ஆனால் சில மரவியாபாரிகளுக்கு துணையாக மட்டுமே இந்த பகுதிகளுக்கு அடிக்கடி வந்து செல்வார்களாம்??? போலி அனுமதிகளின் மூலம் மரங்களும் அதிகளவில் காணமல் போகுமாம்??? இந்நிலையில் மக்களாட்சி புலனாய்வு குழுவுக்கு கிடைக்கப் பெற்ற ஒரு சிசிடிவி காட்சிகளை கடந்த 16/06/ 2020 அன்று வெளியிட்டு அந்த பகுதியில் சிறுத்தை ஒன்று இருப்பதையும் அது அங்குள்ள வளர்ப்புப் பிராணிகளைப் பிடித்து செல்வதையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு முறைப்படி வனத்துறையினருக்கும் தெரிவித்திருந்தோம் .உடனடியாக செல்வதாகக் கூறிய வனத்துறையினர் தலையை மட்டும் காட்டிவிட்டு ஜுட் விட்டுள்ளனராம்?? இந்நிலையில் சிறுத்தை அடிக்கடி வந்து போன அதே வீட்டின் பின்புறம் உள்ள தண்ணீர் தொட்டியில் இரண்டுதினத்திற்கு முன் காட்டுமாடு ஒன்று விழுந்து உள்ளது. பொதுமக்களின் புகாரின் பேரில் உடனடியாக அந்த இடத்திற்கு வனத்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் வந்து அதைக் காப்பாற்றி உள்ளனர் .அதிலும் தீயனைப்பு துறையினரின் பங்குதான் அதிகமாக இருந்துள்ளதாம்!! R R T டீம் என்று ஒன்று உள்ளதா? என்றால் இல்லையேன்றே சொல்ல வேண்டும் . இவர்களுக்கு(நபர் ஒன்றுக்கு ) (சுமார் 20 நபர்கள் ) மாதம் ரூ 10,000/- சம்பளம் வேறு? இதில்மட்டும் அரசுக்கு மாதத்தில் பல இலட்சங்கள் இழப்பு !!! தற்போது அந்த பகுதியில் இரண்டு சிறுத்தைகள் /ஒரு கரடி / 30 காட்டுபன்றிகள்/ மூன்று பெரிய அளவு முள்ளாம்பன்றிகள் என ஒரு பெரிய கூட்டமே உலா வருவதாக கூறும் மக்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வெலிங்டன் ராணுவ குடியிருப்பு பகுதிக்கு ஒரு சிறுத்தை வந்ததாக புகார் வந்தவுடன் குன்னூர் வனத்துறையினர் ஓடி சென்று பார்த்ததையும் அவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துகொண்டதையும் கூறி வருத்தப்படுகின்றனர். மேலும் இங்கு வரும் காட்டுவிலங்குகளின் வழித்தடத்தை கூட தெரிவித்துள்ளனர். ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பும் இன்னொரு கண்ணுக்கு வெண்ணையும் என்று சொல்வதுபோல. ராணுவ குடியிருப்பு வாசிகளுக்கு ((வெண்ணை பக்கெட்டுகளையும் ))இந்த பகுதி குடியிருப்புவாசிகளுக்கு (( சுண்ணாம்பு பக்கெட்டுகளையும்)) குன்னூர் வனத்துறையினர் ஆர்டர் செய்துள்ளதாக கூறப்படுகிறது. வனவிலங்குகள் பெறும்பாலும் ஆப்பிள்பீ பகுதியில் குடியிருக்கும் அரசு மருத்துவராக இருந்த டாக்டர் பொட்டுலூ என்பவர் வீட்டின் அருகில் உள்ள வழியைத்தான் தனது இரைக்கான வழியாக தேர்ந்தெடுத்துள்ளன என்பதையும் பெருமைக்குரிய நமது குன்னூர் வனத்துறையினருக்கு எங்கள் மக்களாட்சி புலனாய்வு இதழின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம். புகார் தெரிவித்த அன்றே உதகை மாவட்ட அலுவலர் நடவடிக்கையை உடனே எடுப்பதாக கூறியுள்ளார் ஆனால் நம்பிக்கையான அந்த வார்த்தை அந்த பகுதி மக்களுக்கு இப்போது துரோகமான வார்த்தைகளாக மாறிவிட்டதாம் ??? "" வனத்துறையினரே!! உங்களின் கடமைகளை சரிவர செய்யாமல் அரசுக்கும் மக்களுக்குமிடையேயான நம்பிக்கை என்னும் பாலத்தை ஏன் உடைக்கிறீர்கள்?? காடு என்று ஒன்று இல்லாவிட்டால் மனித குலமே இல்லாமல் போய்விடும் என்றுதான் வனத்தை பாதுகாக்க அரசு பலகோடிகளை செலவு செய்து உங்களையெல்லாம் பணியில் அமர்த்தி அழகு பார்க்கிறது ஆனால் உங்களின் சுயலாபத்திற்காக காட்டு மரங்களை சில மரவியாபாரிகள் கபலீகரம் செய்வதற்கு நீங்களே உடந்தையாக நின்று சட்டத்திற்கு புறம்பாகவும் / எதிராகவும் செயல்பட்டு உங்கள் வருமானத்தை அதிகப்படுத்த. அப்பாவி காட்டு விலங்குகளையும் மனிதர்களையும் மோத விட்டு வேடிக்கை பார்ப்பது நியாயமா????? காட்டுக்கும் /நாட்டுக்கும் துரோகம் செய்யாதீர்கள் நீங்கள் சாப்பிடும் சாப்பாட்டில் கூட அவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளது. மக்கள் ஒன்று சேர்ந்து விட்டால் உங்கள் கதி அதோ கதிதான் !!!மக்கள் பணியே!! மகேசன் பணி!! என்று மனசாட்சிக்கு பயந்து கடவுளுக்காகவாவது உண்மையாக இருங்கள்.
A.P.அஸ்மத்அலி
முதன்மை ஆசிரியர்
No comments:
Post a Comment