கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வருவதை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

கூட்டுறவு வங்கிகளை, ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வருவதை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு...


கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும் என மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு அறிவித்திருப்பது கண்டனத்துக்குரியது. விவசாயிகளுக்கு ஏழை எளிய மக்களுக்கு பலவகையான கடன்களை வழங்கும் மாநில அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வு வங்கிகளுடன் இணைப்பது மாநில உரிமைகளை பறிக்கும் செயலாகும்.  எதிர்காலத்தில் விவசாயிகளுக்கு மாநில அரசுகள் விவசாய கடன்களை தர தடையாக இருக்கும். பேரிடர் காலத்தில் விவசாய கடன்களை மாநில அரசுகள் ரத்து செய்ய முடியாது.  ஏழை எளியவர்கள் எளிமையாக குறைந்த வட்டியில் நகைக்கடன் பெறமுடியாது. கூட்டுறவு இயக்கம் நீண்டகாலமாக கிராமப்புற அடித்தட்டு மக்களின் உணர்வுகளோடு ஒன்றிணைந்தது. கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியுடன் இணைப்பதால் மக்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்பதை மக்கள் நம்ப தயாராக இல்லை கூட்டுறவு வங்கிகள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அந்தந்த மாநில மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் சென்றுவிட்டால் பிற மாநிலத்தவர்கள் ஆதிக்கம் அதிகமாகிவிடும்.  கொரானா பேரிடரை பயன்படுத்திக்கொண்டு மக்கள் உரிமைகளை, மாநில உரிமைகளை பறிக்கும் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியுடன் இணைக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து,,  தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளுக்கு முன் தந்தை பெரியார் திராவிடர் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது 29/06/2020 திங்கள் காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கோவை.இராமகிருட்டிணன் பொதுச்செயலாளர் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் தெரிவித்துள்ளார்.


 


பா.ரவி


சிறப்பு ஆசிரியர் - தேசிய மக்களாட்சி.


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...