40 வருட சேவைக்குப் பிறகு ஜித்தாவின் பழைய விமான நிலையம் மூடப்பட்டது

40 வருட சேவைக்குப் பிறகு ஜித்தாவின் பழைய விமான நிலையம் மூடப்பட்டது..


40 வருட சேவைக்குப் பிறகு ஜித்தாவின் பழைய விமான நிலையம் மூடப்பட்டது  ஜித்தாவின் கிங் அப்துல்லஸீஸ் சர்வதேச விமான நிலையம் தெற்கு டெர்மினல் மூடப்பட்டிருப்பதாகவும், அனைத்து செயல்பாட்டு நடவடிக்கைகளும் ஜித்தாவின் சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 1 க்கு மாற்றப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  விமான போக்குவரத்தின் பொது ஆணையம் (GACA) தெற்கு டெர்மினலின் வீடியோ கிளிப்பை வெளியிட்டது. அதில் 40 வருட சேவைக்குப் பிறகு மூடப்படும் என்றும் இது மறக்க முடியாத பயணங்களின் அழகான நினைவுகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.  ஜித்தாவின் கிங் அப்துல்அஸிஸ் சர்வதேச விமான நிலையத்தின் புதிய டெர்மினல் 1 ல் கடந்த ஒரு வருடத்தில் 30 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளை வந்து சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 


செய்தி M.அஸ்லம்பாஷா


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...