திருநெல்வேலி மாவட்ட பீடி தொழிலாளர் சங்கம் CITU நிர்வாகிகள் கூட்டம்
திருநெல்வேலி மாவட்ட பீடி தொழிலாளர் சங்கம் CITU நிர்வாகிகள் கூட்டம் துணைத் தலைவர் A. சூசை அருள் சேவியர் தலைமையில் திருநெல்வேலியில் நடைபெற்றது.அனைத்து நிர்வாகிகளும் முகக்கவசம் அணிந்து சமூக விலகல் உடன் கலந்து கொண்டனர்.மத்திய மாநில அரசுகளின் செயல்பாடு தொழிலாளர் நலச் சட்டங்களை கோரோனா காலத்தில் திருத்துதல் வேலை நேரத்தை அதிகரித்தல் பீடித் தொழிலாளர்களுக்கு நிவாரண நிதி வழங்காமல் ஏமாற்றியது பஞ்சப்படி உயர்வு சம்பந்தமாக மாவட்ட பொதுச்செயலாளர் M.வேல்முருகன் ரிப்போர்ட் செய்தார்.. கூட்டத்தில் நிர்வாகிகள் A. ஆரிய முல்லை A. மகாவிஷ்ணு, A. குருசாமி, P.S. மாரியப்பன், K. மாரிச்செல்வம், S. கற்பகவல்லி, V. இசக்கி ராஜன், R. கருப்பசாமி, P. பரமசிவன், R. அருணாச்சலம்,P. தர்ம கனி,S. பொட்டு செல்வம் கலந்து கொண்டனர்,
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் விபரம் பின்வருமாறு,
1. பீடி தொழிலாளர்களுக்கு 01.04.2020 முதல் பஞ்சப்படி உயர்வு ஆயிரம் பிடிக்கு ரூ.10.62 பீடி கம்பெனிகள் அரியர்ஸ்வுடன் மொத்த கூலி ரூபாய் 207.86 வழங்கிட. வேண்டும்,
2. மத்திய மாநில அரசுகள் கோரோனோ காலத்தில் 144 தடை உத்தரவினால் பீடி கம்பெனிகள் பிடி தொழிலாளர்களுக்கு 50 நாட்களுக்கு மேலாக வேலை வழங்காத ஆட்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவுபடி சம்பளம் வழங்கிட தொழிலாளர் துறை நடவடிக்கை எடுத்திட கோரியும் மத்திய மாநில அரசுகள் நிவாரண உதவி மாதம் ரூபாய் 7500 , 20 கிலோ அரிசி மத்திய சேம நல நிதி மூலமாகவும் கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, மகராஷ்டிரா மாநில அரசுகள் வழங்கிய நிவாரணம் வழங்கிட கோரி ஜூலை மாதம் முதல் வாரத்தில் மாவட்டம் முழுவதும் பீடி தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது,
3. தரமான இலை ஆயிரம் பிடிக்கு 700 கிராம் அனைத்து பீடி கம்பெனிகளுக்கும் வழங்கிட வேண்டும்,
4. நுண் நிதி நிறுவனங்கள் தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக கட்டாய கடன் வட்டி சுய உதவி குழுக்களின் வசூலிப்பதை தமிழக அரசு மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்திட வேண்டும் மேற்கண்ட தீர்மானங்களை மேற்கொண்டனர்.
கோவிந்தராஜ்
தென்காசி மாவட்ட செய்தியாளர்.
No comments:
Post a Comment