சங்கராபுரம் இந்தியன் வங்கியால் கொரோனா பரவும் அபாயம்.... கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் உள்ள இந்தியன் வங்கியில் மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. பெரும்பாலான மக்கள் இவ்வங்கியில் பணம் எடுக்க குவிவதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மானியத் தொகைகளை எடுக்கவும், சேமிப்பில் இருந்து பணத்தை எடுக்கவும் மக்கள் தினந்தோறும் இவ்வங்கிக்கு படையெடுக்கின்றனர். முதியோருக்கான உதவித் தொகை பெறுவதற்கும் முதியவர்கள் அதிகளவில் வருகின்றனர். மக்களிடையே சமூக இடைவெளி குறித்த விழிப்புணர்வு போதிய அளவில் இல்லாததால், இவ்வங்கி வளாகத்தில் நெருக்கியடித்து நிற்கின்றனர். அவர்களை ஒழுங்குபடுத்த அங்கு ஒரு காவலர்கள் கூட இல்லை. அரசின் வருவாய்க்காக திறக்கப்பட்ட மதுபானக் கடைக்கு முறையாக தடுப்பு ஏற்படுத்தி, மது வாங்க வருகை புரியும் 'குடி' மக்களுக்கு டோக்கன் கொடுக்கும் முறையை புகுத்தி அவர்களுக்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்து டாஸ்மாக் மூலம் மதுவை விற்று வருகிறது அரசு. இதில் இக் குடிமக்களுக்கு பாதுகாப்புக்காக இரண்டு காவலர்கள் வேறு. மக்களுக்கான எவ்வளவோ சேவைகளுக்கு காவலர்கள் தட்டுப்பாடு உள்ள நிலையில் 'குடி' மக்களுக்கு இரண்டு காவலர்களை பாதுகாப்புக்கு வழங்குகிறது மக்களுக்கான அரசு. டாஸ்மாக்கிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் பாதியை மற்ற மக்கள் சேகைகளுக்கும் கொடுத்தால் சிறப்பாக இருக்கும்,
காவல்துறைக்கு வேண்டுகோள்:
கொரோனா எனும் கொல்லை நோய்ப் பரவி வரும் இச்சூழலில், கடை வீதியிலும், வங்கிகளிலும் மக்கள் விழிப்புணர்வு இல்லாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் இவ்வாறு கூடுவது பேராபத்தை ஏற்படுத்தும். எனவே, காவல்துறை இதில் தலையிட்டு இந்தியன் வங்கிக்கு போதிய காவலர்களை அமர்த்தி மக்களை ஒழுங்குபடுத்த வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். காவல்துறை கேட்டுக் கொள்ளும் பட்சத்தில் தன்னார்வலராக இங்குள்ள இளைஞர்கள் நாங்களும் இதில் பங்கேற்கிறோம். எங்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு காவல்துறைக்கு வேண்டுகோள் விடுக்கிறோம் என முஹம்மது யாசின் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் தெரிவித்துள்ளார்.
பா.ரவி,
சிறப்பு ஆசிரியர் - தேசிய மக்களாட்சி.
No comments:
Post a Comment