சங்கராபுரத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க இரவிலும் தொடரும் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் பேரூராட்சி நிர்வாகமும், தீயணைப்புத் துறையினரும் ஈடுபட்டனர்...
கள்ளக்குறிசசி மாவட்டம் சங்கராபுரத்தில் கொரோனா நோய் தொற்று சிலருக்கு உறுதியானதை தொடர்ந்து தடை செய்யப்பட்ட பகுதியாக ஒரு சில பகுதிகளை பேரூராட்சி நிர்வாகம் கண்டறிந்து தடுப்புகளை அமைத்து அனைத்து தெருக்களிலும் கிருமிநாசினி தெளிக்கு பணியினை அதிகப்படுத்தியிருந்த நிலையில் கடந்த இருதினங்களுக்கு முன்னர் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு அவர் கோவை மருத்துவமனை சிகிச்சைக்காக அனுப்பப்பட்டிருந்தார் இந்நிலையில் SP அலுவலகத்தில் பணி புரியும் காவலர்கள் உட்பட சுமார் 40க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இதில் இரு காலவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் கண்டறியப்பட்டு தனிமை படுத்தப்பட்டுள்ளனர் இதனால் மாவட்டத்தில் உள்ள காவல்துறையினர் சற்றே கலக்கமடைந்தே காணப்படுகின்றனர் இந்நிலையில் சங்கராபுரம் பேரூராட்சி நிர்வாகம் தீயணைப்பு துறையினருடன் இணைந்து பகலில் கிரிமிநாசினி தெளிக்கும் பணியுடன் நிறைவு செய்யாமல் இரவிலும் சங்கராபுரம் முழுக்க கிருமிநாசினி தெளிக்கும் பணியை தொடர்ந்து மேற்கொண்டனர் அதோடு மட்டுமின்றி முகக்கவசம் அணியாமல் நகர் பகுதியில் வருபவர்களுக்கு அபராதமாக 100 ரூபாய் விதிப்பதுடன் மாஸ்க் ஒன்றையும் வழங்கி பொது மக்களுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர் மேலும் பேரூராட்சி ஊழியர்களுக்கு அவ்வப்போது கபசுர குடிநீர் வழங்கியும், முகக்கவசம் மற்றும் கை உரை வழங்கியும் தொடர்ந்து விழிப்புடன் செயல்பட்டு வருகின்றனர் பேரூராட்சி நிர்வாகத்தின் ஓய்வில்லா தொடர் பணிகளை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
பா.ரவி
சிறப்பு ஆசிரியர் - தேசிய மக்களாட்சி
No comments:
Post a Comment