தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தங்க வைத்துள்ள வெளிமாநில விருந்தாளிகளை இடமாற்றம் செய்ய வேண்டுகோள் எழுந்துள்ளது
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தங்க வைத்துள்ள வெளிமாநில மாவட்ட விருந்தாளிகளை இடமாற்றம் செய்ய வேண்டுமென வேண்டுகோள் எழுந்துள்ளது அவற்றை பார்ப்போம்,
ஆலங்குளம் அரசு திருமணமண்டபம் அண்ணாநகரின் முகப்பில் அமைந்துள்ளது. அனைத்து தரப்பு பொது மக்களும் பயன் படுத்தம் பிரதான வழியும் திருமண மண்டபம் அருகில் செல்லும் சாலையாகப் உள்ளது . ஆலங்குளம் பஸ்நிலையம், அரசு மருத்துவமனை, அரசு கருவூலம் மற்றும் யூனியன் அலுவலகம், மகளிர் காவல்நிலையம் என மக்கள் பெரிதும் பயன் படுத்தும் இடங்களுக்கு சென்றுவரும் மெயின் வழியும் இங்குதான் உள்ளது. பெண்கள் குழந்தைகள் வியாபாரிகள் மாணவ மாணவிகள் அரசு ஊழியர்கள் பொதுமக்கள் பயன்படுத்தும் பொதுவழியும் இதுவே ஆகும் ஆலங்குளம் அண்ணாநகர் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடுத்தர உழைக்கும் மக்கள் நிம்மதியாக வாழ்ந்துவருகின்றனர் கடந்த சில நாட்களாக இங்கு வெளி மாநில மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் கொரோனா நோய் ஆய்வுக்காக இங்கு பல நூறு நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் நோய் பாதித்தவர்கள் அதிக மானவர்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் வாழும் பொதுமக்கள் தங்களுக்கும் கொரோனா நோய் பரவக்கூடும் என்ற அச்சத்தில் வாழ்ந்துவருகிறனர். பொதுமக்களின் நலன் கருதி ஊரின் மையைப்பகுதியில் செயல்படும் வெளி மாநில மாவட்டத்தில் இருந்து வருபவர்களை ஊரின் வெளிபகுதியில் உள்ள கட்டிடங்களில் அவர்களை தங்கவைக்க வேண்டுகிறோம். பொதுமக்கள் நலன் கருதி திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களை வேறு இடத்திற்க்கு மாற்ற மாவட்ட ஆட்சியர் அவர்கள் நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் நிம்மதியான வாழ்விற்க்கு உத்திரவாதம் வழங்க வேண்டி எம்.ஜி.ஆர் மக்கள் கட்சியின் நிறுவனர் மேஜர் ரவிக்குமார். தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவிந்தராஜ் செய்தியாளர் தென்காசி
No comments:
Post a Comment