தென்காசி மாவட்டத்தில் மணல் கொள்ளை கேள்வி கோட்டவரை மிரட்டும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் இன்ஸ்பெக்டரும் டிஎஸ்பியும்..
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா K.ஆலங்குளம் கிராம நிர்வாக அலுவலர் செல்லத்துரை அவர்கள் உதவியுடன் K. ஆலங்குளம் கிராம பகுதியில் எந்த ஒரு அனுமதி பெராமலும் சரள் மண் இரவு பகாலாக திருடப்பட்டு வருகிறது. இது சம்மந்தமாக கேள்வி எழுப்பியபோது பத்திரிக்கையாளர்களை மிரட்டம் கிராம நிர்வாக அலுவலர் இன்ஸ்பெக்டர் மற்றும் டிஎஸ்.பி.ஆகியோர் துணையோடுதான் செய்கிறேன் எனவும் கூறிவருகிறார் மேலும் இளையராஜா என்பவரிடம் 25000/- ரூபாய் சரள் மண் அடிக்க மிரட்டி பணம் பறித்துள்ளார் என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதுபோன்ற திருட்டுத்தனமாக சரள் மண் அடிக்க வைட்டமின் Mஐ பெற்றுக்கொண்ட கிராம நிர்வாக அலுவலர் என்னை ஒன்றும் செய்ய முடியாது எனவும் எனக்கு மேல்மட்டம் வரை அதிகாரிகள் உள்ளர்கள் என்று கூறிவரும் கிராம நிர்வாக அலுவலர் செல்லத்துரை மீது அரசு துறைசார்ந்த நடவடிக்கை திருவேங்கடம் வட்டாச்சியர் எடுப்பாரா?
கொரனா வைரஸ் 19 தொற்று நோய் பரவி வரும் நிலையில் அவசரமாக பொதுமக்கள் மருத்துவமனைக்கு வெளியே செல்லுவதற்க்கு பலமுறை விண்ணப்பித்தும் E. பாஸ் கொடுக்க மறுக்கும் மாவட்ட நிர்வாகம் JCB வகானம், மற்றும் லாரிகள் மூலம் சரள் மண் அடிப்பதற்க்கு எப்படி அடிக்க அனுமதி அளித்தார்கள் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆகவே தென்காசி மாவட்ட நிர்வாகம் துரித நடவாக்கை எடுக்குமா?
கோவிந்தராஜ்
மாவட்ட நிருபர் - தென்காசி
No comments:
Post a Comment