பொன்னமராவதி ஒன்றியத்தில் இன்று மட்டும் 13 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி...
பொன்னமராவதி ஒன்றியத்தில் இன்று மட்டும் 13 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் மதியாணியில் 8 நபர்களுக்கும் பொன்னமராவதி மற்றும் பொன்- புதுவளவு பகுதிகளில் 5 நபர்களுக்கும் என மொத்தம் 13 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணி நாகராஜன், சுகாதார ஆய்வாளர்கள் தியாகராஜன், உத்தமன் மற்றும் சுகாதார பணியாளர்கள் பேரூராட்சி பணியாளர்கள் தொற்று உள்ள இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து மேலும் தோற்று உள்ளவர்களை புதுக்கோட்டை அரசு இராணியர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு அப்பகுதியில் கிருமி நாசினி மற்றும் பிளீச்சிங் பவுடர் ஆகியவை பயன்படுத்தி சுகாதாரப் பணியாளர்களை கொண்டு தூய்மைபடுத்தப்பட்டு வருகின்றனர்.
ஈனா (எ) இப்ராஹிம்
சிறப்பு நிருபர், திருப்பத்தூர்.
No comments:
Post a Comment