குவைத்தில் விசா புதுப்பித்தல் அக்கம்மா மாற்றம் செய்தல் மற்றும் ஜப்தர் Renewal போன்ற சேவைகள் ஜூன் 30 முதல் தொடங்கும் என குவைத் உள்துறை அறிவிப்பு

குவைத்தில் விசா புதுப்பித்தல் அக்கம்மா மாற்றம் செய்தல் மற்றும் ஜப்தர் Renewal போன்ற சேவைகள் ஜூன் 30 முதல் தொடங்கும் என குவைத் உள்துறை அறிவிப்பு..


குவைத்தில் விசா புதுப்பித்தல், (அக்கம்மா) மாற்றம் செய்தல் மற்றும் ஜப்தர் Renewal போன்ற சேவைகள் ஜூன் 30 முதல் தொடங்கும் என குவைத் உள்துறை (MOI) அறிவிப்பு,


குவைத்தில் படிப்படியாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவது குறித்து அமைச்சரவை வழிகாட்டுதல்களின்படி , உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை ( ஜூன் 30 ) முதல் காலை 9:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை அரசு அலுவலகங்கள் 30% பணியாளர்களுடன் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,


கொரோனா வைரஸ் நோய் பரவுவதை கட்டுப்படுத்தவும் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் உள்துறை அமைச்சகத்தால் அதிகளவிலான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,


ஜூன் 30ம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் உள்துறை அமைச்சக அலுவலகங்களில்  குடியிருப்பு (அக்காமா) மற்றும் ஒரு ஸ்பான்சரிடமிருந்து இன்னொருவருக்கு குடியிருப்பை (அக்கம்மா) மாற்றுவது போன்ற நடைமுறைகள் நடத்தப்படும் என்று குவைத் உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.


ஓட்டுநர் தேர்வில் (Driving Test) தேர்ச்சி பெற்றவர்களுக்கு  Driving License வழங்குதல் , ஜப்தர் Renewal, வாகன உரிமையை மாற்றுவது மற்றும் போக்குவரத்து மீறல்களுக்கு அபராதம் செலுத்துதல் ஆகியவற்றை அலுவலகங்களில் செய்யலாம் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது,


அனைத்து சேவைகளுக்கும் ஞாயிற்றுக்கிழமை ( ஜூன் 28 ) முதல் www.moi.gov.kw குவைத் உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் Online ல் முன்பதிவு செய்து Appointment பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .    இவ்வாறான பணிகளை மேற்கொள்ளுவதற்காக வருகை தருபவர்கள்  சுகாதார வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 


செய்தி - M.அஸ்லம்பாஷா.


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...