தேவிபாலா சமூக பொது நல அறக்கட்டளையின் சார்பில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூட்டும் ஹோமியோபதி மருந்தான ஆர்சனிகம் ஆல்பம் 30 C மருந்து வழங்கல்...
தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஒன்றியம், கல்லூரணி கிராமம், சிவநாடனூர் ஊராட்சி மடத்தூர் பகுதியிலுள்ள ஸ்ரீராமர் ஆலாய வளாகத்தில் தேவிபாலா சமூக பொது நல அறக்கட்டளையின் சார்பில் நிறுவனர் திருமதி.தேவி பகவதியம்மாள் அவர்கள் ஆணைக்கு இணங்க கொரனா வைரஸ் - 19 தொற்று நோய் பரவலை தடுக்கும் வகையிலும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூட்டும் வகையில் தமிழக அரசு பரிந்துரை செய்துள்ள ஹோமியோபதி மருந்தான ஆர்சனிகம் ஆல்பம் - 30 C மருந்தினை ஹோமியோபதி மருத்துவர்கள் திரு.அபிமன்யூ, திரு.ஜாஸிர் அகமுது, மற்றும் திரு.முகமது இஸ்மாயில் ஆகியோர் தலைமையில் மேற்படி "ஆர்சனிககம் - ஆல்பம் 30c" என்ற ஒமியோபதி மருந்தினை வழங்கினார்கள். மேற்படி நிகழ்ச்சியில் கல்லூரணி கிராம நிர்வாக அலுவலர் திரு.முருகேஷன் இந்து நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு .கதிர்வேல், LIC திரு.ராமர், திரு.முத்துசாமி, திரு.பண்ணீர்செல்வம், ஊராட்சி செயலர் திரு.செல்வன், சமூக ஆர்வலர் திரு.வேல்ராஜ் திரு.சமூத்திரப்பாண்டி ஆகியோர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள். மேற்படி நிகழ்ச்சியினை கீழ்கண்ட தேவிபாலா சமூக பொது நல அறக்கட்டளையின் நிர்வாகிகள் திரு.ஹரிஹரசுதன், திரு.இராமகிருஷ்ணன், திரு.பூமாரி ஏற்பாடு செய்தார்கள் மற்றும் அப்பகுதி தூய்மை காவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கோவிந்தராஜ்
No comments:
Post a Comment