விக்னேஸ்வரபுரம் நடு நிலைப்பள்ளியில் குடிநீர் சுத்திகரிப்பு மெஜின்,எரிவாயு கலன் வைக்கப்பட்டதற்கான பில் உள்ளது.பொருளை காணவில்லை.காவல் நிலையம் கண்டு பிடித்து தருமா?
அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் ஊர்வணி ஊராட்சியில் 2016-2017 ம் நிதி ஆண்டில் பாக்குடி குளம்,பள்ளத்திவயலில் போர் போட்டதாக செலவு கணக்கு 8,00,000( 8 லட்சம்) தரப்பட்டுள்ளது.மேலும்2019 ல் நான் த.அ.உ.சட்டம் மூலம் தகவல் கேட்ட போது அன்றைய வட்டார வளர்ச்சி அலுவலர் போர் பொது பயன்பாட்டில் இருப்பதாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்து தகவல் தரப்பட்டது.ஆனால் இந்த இரண்டு போரையும் தற்சமயம் காணவில்லை. 2016-2017 ல் இருந்த ஓவர்சியர் கையொப்பமிட்டு,அன்றைய வட்டார வளர்ச்சி அலுவலர் பார்வை இட்டு கையொப்பமிட்டு பில் ஒப்பந்த காரருக்கு வழங்கப்பட்டது.ஆனால் தற்போது போரை காணவில்லை . போரை கண்டுபிடித்து தர ஆவுடையார்கோவில் காவல் நிலையம்,மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலர்களுக்கு இணையம் மூலம் வழக்கு பதிய உள்ளேன். இது போல் விக்னேஸ்வரபுரம் நடு நிலைப்பள்ளியில் குடிநீர் சுத்திகரிப்பு மெஜின்,எரிவாயு கலன் வைக்கப்பட்டதற்கான பில் உள்ளது.பொருளை காணவில்லை.காவல் நிலையம் கண்டு பிடித்து தருமா?
E.கோபால் ஆபரண்
சிறப்பு ஆசிரியர்
No comments:
Post a Comment