தென்காசி மாவட்டம் கடையநல்லூர். நகராட்சியில் கூட்டு துப்பரவு பணி நடைப்பெற்றது...
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சியில் ஒவ்வொரு வாரம் தோறும் கூட்டு துப்பரவு பணி நடைபெறுவதுண்டு . அதன்படி இன்று நகராட்சி ஆணையர் குமார் சிங் ( பொ) உத்தரவின்பேரில் சுகாதார அலுவலர் நாராயணன் தலைமையில் நகராட்சியின் ஒட்டு மொத்த துப்பரவு பணியாளர்களும் கொல்லம் to மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கிடந்த மண் திட்டுகள் புல் செதுக்கியும் கழிவு நீர் ஒடைகளை சுத்தம் செய்து கிருமி நாசினி மற்றும் பிளிச் சிங் பவுடரை தூவி சாலையை சுத்தப்படுத்தினர் மேலும் நெடுஞ்சாலையில் கிடந்த மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் செடி கொடிகளையும் அகற்றினர். நடைபெற்ற துப்புரவு பணியினை நகராட்சி ஆய்வாளர்கள் சேகர், மாரிச்சாமி, மேற்பார்வையில் துப்பரவு பணியாளர்கள் பணி மேற்கொண்டனர். மேற்படி பணியினை பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாரட்டி வருகின்றனர்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் A.கோவிந்தராஜ்..
No comments:
Post a Comment