வக்காலத்திற்கு நோ அப்ஜெக்சன் தேவையில்லை...
வழக்கறிஞர் மற்றும் அவருடைய கட்சிக்காரருக்கிடையேயான உறவு என்பது தொழில் முறை சம்பந்தப்பட்ட ஒரு உறவாகும். அந்த உறவு இருதரப்பினருக்குமிடையேயுள்ள நம்பிக்கையை பொறுத்து அமைகிற ஒன்றாகும். வழக்கறிஞர் தொழில் என்பது ஒரு சேவை Service மட்டுமல்ல. ஒரு கட்சிக்காரர் தன்னுடைய வழக்கறிஞரை மாற்றி புதிதாக வேறொருவரை நியமிக்க விரும்பினால் அந்த வழக்கிலிருந்து விலகி கொள்வதை தவிர பழைய வழக்கறிஞருக்கு வேறு வழியில்லை. இவ்வாறு கட்சிக்காரர் புதிதாக வழக்கறிஞரை நியமிப்பதால் பழைய வழக்கறிஞரின் அடிப்படை உரிமை பாதிக்கப்படுவதில்லை. பழைய வழக்கறிஞர் தனது கட்சிக்காரர் தனது சம்மதம் இல்லாமல் புதிதாக வேறொரு வழக்கறிஞரை நியமித்து விட்டதால் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்ய முடியாது. ஏனென்றால் வழக்குகளை விசாரிப்பது மட்டுமே நீதிமன்றத்தின் கடமையாகும். அந்த வேலையை செய்யாமல் ஒரு கட்சிக்காரருக்கும், அவரது வழக்கறிஞருக்கும் இடையேயான பிரச்சினைகளை விசாரித்து கொண்டிருக்க முடியாது. எனவே ஒரு கட்சிக்காரர் தன்னுடைய வழக்கறிஞரை மாற்றி புதிதாக வேறொருவரை வழக்கறிஞராக நியமிக்க ஆட்சேபனை இல்லை என்று ஒரு ஒப்புதல் கடிதத்தை பழைய வழக்கறிஞரிடமிருந்து பெற வேண்டிய அவசியம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
W. A. NO - 1029/2014, DT - 4.8.2014 S. திவாகர் Vs துணை பதிவாளர் (Writs), உயர்நீதிமன்றம், சென்னை 2014-6-MLJ-638
உயர்நீதிமன்றம் வழக்கறிஞர்,
G R சுரேஷ்குமார்,
கௌரவ ஆசிரியர் - தேசிய மக்களாட்சி
No comments:
Post a Comment