திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகளுக்காக விளையாட்டுப் பொருட்கள் மற்றும் புத்தகங்கள் வழங்குதல்...
திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. திஷா மித்தல் இ.கா.ப அவர்களால் உடுமலைப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு குழந்தைகளுக்காக விளையாட்டுப் பொருட்கள் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டது.காவல் நிலையங்கள் பிரச்சனைகளை தீர்க்கும் இடம் மட்டும் இல்லாமல் குழந்தைகளுக்கு நல்ல கருத்துக்களை போதிக்கும் இடமாகவும் நல்வழிப்படுத்த கூடிய இடங்களாகவும் இருக்கவேண்டும் என்ற கண்ணோட்டத்தில் இப்பொருள்கள் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் பயிற்சி உதவி காவல் கண்காணிப்பாளர் திருமதி. ஸ்ரெயா குப்தா இ.கா.ப மற்றும் உடுமலைப்பேட்டை காவல்துறை கண்காணிப்பாளர் திரு.ரவிகுமார் ஆகியவர்கள் உடன் இருந்தனர்.
திருப்பூர் மாவட்ட நிருபர் பாலசுப்ரமணியம்
No comments:
Post a Comment