தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் இந்திய தேசிய நகர காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தி ஜெயந்தி விழா நடைப்பெற்றது

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் இந்திய தேசிய நகர காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தி ஜெயந்தி விழா நடைப்பெற்றது...



தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகர இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பாக மற்றும் பொன் விழா கமிட்டியின் சார்பாகவும் காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர்  நினைவு நாளையொட்டி, கோமதி அம்பாள் திருகோவில் முன்பு அமைந்துள்ள காந்தி சிலைக்கு மலர்தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது,.   நடைபெற்ற நிகழ்ச்சியில் நகர தலைவர் உமா சங்கர் தலைமை வகித்தார். பொன்விழாகமிட்டி தலைவர் சித்திரக்கன்னு முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மனோகரன் குருவிகுளம் வட்டார செயலாளர் அழகை கண்ணன் மற்றும் புதிரை வண்ணார் நல வாரிய உறுப்பினர் வைத்தியர் மனோகரன் மற்றும்  நகர துணைத்தலைவர் பீர்முகமது, தகவல் தொழில்நுட்ப பிரிவு நசுரூதீன் சிவாஜி மன்றம் பாலகிருஷ்ணன் வட்டார தலைவர்கள் குருவிகுளம் சுந்தர்ராஜ் மேலநீலிதநல்லூர், செந்தூர்பாண்டியன, சங்கரன்கோவில் ஐய்யாத்துரை  ராஜேந்திரன் (Red VAO)சத்தியமூர்த்தி மாரிமுத்து மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.     இந்த நிகழ்ச்சியையொட்டி ஏழை எளிய 30 பெண்களுக்கு   இலவச சேலை வழங்கப்பட்டது. விழா நிறைவில் அந்தோணி நன்றி கூறினார். 


 


தென்காசி மாவட்ட செய்தியாளர்


A. கோவிந்தராஜ்.


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...