செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம் சதுரங்கப்பட்டினம் கிராமத்தைச் சார்ந்த தேசிய லஞ்ச ஊழல் கண்காணிப்பு குழு மற்றும் மக்கள் உரிமை இயக்க உறுப்பினர்களால் இன்று (06/09/20) இரண்டாவது கட்டமாக சாலையோரத்தில் வசிக்கக்கூடிய ஆதரவற்ற சகோதரர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
தேசிய லஞ்ச ஊழல் கண்காணிப்பு குழு மற்றும் மக்கள் உரிமை இயக்க உறுப்பினர்கள் மற்றும் சதுரங்கப்பட்டினம் நண்பர்கள் இணைந்து குரானவால் நலிவடைந்த சாலையோரம் வசிக்கக்கூடிய ஆதரவற்ற சகோதரர்களுக்கு சதுரங்கப்பட்டினம் தூய்மைப் பணியாளர்கள் தொடங்கி செங்கல்பட்டு பேருந்து நிலையம் வரை ஆதரவற்ற நிலையில் உள்ள சகோதர சகோதரிகளுக்கு உணவு பொட்டலங்களும் தண்ணீர் பாட்டிலும் முகக் கவசம் வழங்கப்பட்டது. மேலும் தொழுநோயால் பாதிக்கப்பட்டு குராணவால் பொருளாதாரம் முழுவதும் நலிவடைந்த செங்கல்பட்டு மாவட்டம் வல்லம் பஞ்சாயத்தை சேர்ந்த கல்வாரி கிராம பொதுமக்கள் சுமார் 150 நபர்களுக்கு உணவு பொட்டலங்களும் முக கவசமும் சமுதாய பொதுவாழ்க்கையில் பின்பற்றப்பட வேண்டிய குரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வும் அளிக்கப்பட்டது. மேற்கண்ட நிகழ்வில் தேசிய லஞ்ச ஊழல் கண்காணிப்பு குழு மக்கள் உரிமை இயக்க உறுப்பினர்கள், மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். பொருள் உதவி செய்த நல் உள்ளங்கள்:- 1. திரு சாமிநாதன். சதுரங்கப்பட்டினம். 2. திரு பாலசுப்பிரமணியம், மருத்துவர் சதுரங்கப்பட்டினம். 3. திரு செந்தில்குமார் உதவி செயற்பொறியாளர், மாமல்லபுரம். 4. திரு கிருஷ்ணகுமார், சதுரங்கப்பட்டினம். மற்றும் நண்பர்கள்.
ரகமத்துல்லா கல்பாக்கம்.
No comments:
Post a Comment