தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக தென்காசி ஆட்சியரிடம் கோரிக்கை மனு....
தென்காசி ஆர்டிஓ அலுவலகம் அருகே வாகன தகுதிச் சான்று பெற ஒட்டப்படும் ஸ்டிக்கர்- வேக கட்டுப்பாட்டு கருவி அதிக விலைக்கு விற்பனை -. நடவடிக்கை கோரி தமுமுக சார்பில் ஆட்சியருக்கு மனு - தென்காசியில் வாகனங்களுக்கு தகுதிச் சான்று பெறுவதற்கு ஒட்டப்படும் ஒளிர் பட்டை மற்றும் வேக கட்டுப்பாடு கருவி அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க கோரி தமுமுக சார்பில் ஆட்சியரர அருண்சுந்தர் தயாளனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது . அதில் கூறியிருப்பதாவது -தென்காசி மாவட்டத்தை சார்ந்த அனைத்து வாகன ஓட்டுனர்கள் வாகன வரி -தகுதி சான்றிதழ் பெறுவதற்கு மிகவும் சிரமத்தில் உள்ளனர். இந்த சூழ்நிலையில் வட்டிக்கு பணம் வாங்கி வாகனத்திற்கு வரி செலுத்த மற்றும் தகுதி சான்று பெறுவதற்கு அரசுக்குச் செலுத்தவேண்டிய கட்டணம் செலுத்த சென்றால் வாகனத்தில் ஒளிரும் பட்டை ஒட்டினால்தான் தகுதி சான்று வழங்கப்படும் என அரசு அலுவலர்கள் தெரிவிக்கின்றனர் . அப்போதும் அரசு விதிகளை மதித்து விபத்தை தவிர்க்கும் பொருட்டு ஒளிரும்பட்டை ஓட்டுவதற்கு வந்தால் தனிநபர் அனுமதி பெற்று ஒட்டக்கூடிய குற்ப்பிட் நபர் அதிகமான விலை வசூல் செய்கின்றார். அதற்கான விலை பட்டியல் ஒட்டவில்லை .ஒரு ஆட்டோவில் வெளியில் ஒட்டக்கூடிய ஒளிர் பட்டை விலை 150 .ஆனால் அந்த தனிநபர் அலுவலகத்தில் விலை ஆட்டோவிற்கு 650 ம்-காருக்கு ஆயிரத்து 500 ம்-லாரிக்கு 4000 வரை யும் அதிகமான வசூல் நடைபெறுகிறது. மேலும் இந்த ஒளிரும் பட்டை அரசு நிர்ணயித்த விலை எவ்வளவு என்ற விலைப்பட்டியல் அந்தக் கடையில் தெரியப்படுத்தவில்லை மேலும் வாகனங்களுக்கு தகுதிச் சான்று பெறுவதற்கு வேக கட்டுப்பாட்டு கருவி அதிகமான விலை ரூபாய் 4,500 கொடுத்துதான் தகுதி சான்று பெற்றோம். தற்போது மீண்டும் ஆன்லைன் சான்று எனக் கூறி புதிய மீட்டர் வாங்கி மாட்டியுள்ளனர்.
தென்காசி மாவட்ட செய்தியாளர்
A. கோவிந்தராஜ்.
No comments:
Post a Comment