குவைத்தில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பும் வகையில் இரண்டாம் கட்ட தளர்வுகள் குறித்து குவைத் அமைச்சரவையின் முக்கிய முடிவுகள்!
குவைத்தில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பும் வகையில், இரண்டாம் கட்ட தளர்வுகள் குறித்து குவைத் அமைச்சரவையில் இன்று எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகள்,
ஜூன் மாதம் 30 ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் சில முக்கிய முடிவுகள்,
1, முழு நேர ஊரடங்கு உத்தரவு நேரம் இரவு 8.00 மணி முதல் காலை 5.00 மணி வரை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது,
2, குவைத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 30%பணியாளர்களுடன் இயங்க அனுமதி,
3, கட்டுமான பணிகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது,
4, சில்லறை வணிகம் செய்யும் கடைகள், பூங்காக்கள் திறக்க அனுமதி,
5, உணவகங்கள் மற்றும் கஃபேக்களில் உணவுப் பொருட்களை வாங்கி, வெளியே எடுத்துச்செல்ல (TAKE AWAY) அனுமதி ( உணவகங்களில் அமர்ந்து உணவருந்த அனுமதி இல்லை),
6, Mall கள் சிறப்பு வழிகாட்டுதல்களின்படி திறப்பதற்க்கான அனுமதி போன்ற முக்கிய முடிவுகளை குவைத் அமைச்சரவையில் எடுத்துள்ளனர்.
செய்தி M.அஸ்லம்பாஷா
No comments:
Post a Comment