தென்காசி மாவட்டம் தனி தொகுதியில் அரசு அதிகாரியை இடம் மாற்றம் செய்ய எம் ஜிஆர் மக்கள் கட்சி கோரிக்கை....
தென்காசி மாவட்டம் தனி தொகுதியில் அரசு அதிகாரியை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என எம் ஜிஆர் மக்கள் கட்சியினர் கோரிக்கை!
தென்காசியிலிருந்து இலஞ்சி செல்லும் மெயின் ரோட்டில் ஆண்டாண்டு காலமாய் இயங்கி வருகிறது கால் நடைபராமரிப்பு துறை உதவி இயக்குனர் அலுவலகம் கடந்த நான்கு மாதத்திற்க்கு முன்பு உதவி இயக்குனராக பொறுப்பு ஏற்றார் வெங்கட்ராமான் இவர் பொறுப்ப ஏற்ற சிலநாட்களில் அலுவலக சுவரில் போட்டோவாக மாட்டி அலங்கரித்து வந்துள்ள சுவரில் கூடுதலாக இயக்குநர் அவர்களின் அபிமான தேசிய தலைவர் போட்டோவை புதியதாக சுவரில் மாட்டி கூடுதலாக அலுவலக சுவரை அலங்காரம் செய்தார் அதனை அலுவலக ஊழியர்களும் பொதுமக்களும் பெரிதும் பாராட்டி மகிழ்ந்தனர்,
ஆனால் சில வாரங்கள் சென்றதும் அலுவலக சுவரில் ஆண்டாண்டு காலமாய் அலங்கரித்து வந்த தேசிய தலைவரின் போட்டோவை அகற்றி விட்டார் என கேள்விப்பட்டவுடன் எம் ஜி ஆர் மக்கள் கட்சி திருநெல்வேலி மண்டல இயக்குனர் கவனத்திற்கு வாட்ஸ்அப் மூலம் புகார் தெரிவித்தும் தென்காசி கால்நடை உதவி இயக்குனர் கவனத்திற்க்கு கொண்டு சென்றும் எந்த பயனும் இல்லாமல் போனது அதை தொடர்ந்து 5|6|2020 அன்று தென்காசி மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்க்கு கொண்டு சென்றனர்,
தென்காசி கால்நடை பராமரிப்பு துறை அலுவலகத்தை அலங்கரித்து வந்த தேசிய தலைவரின் போட்டோவை மீண்டும் நீக்கப்பட்ட பழைய இடத்தில் மாட்டாமல் சுவரின் ஓர் ஓரத்தில் மாட்டிவைத்தார் இச்செயல் தேசிய தலைவரின் அபிமானிகளையும் பொதுமக்களையும் அலுவலக ஊழியர்கள் அனைவர் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது
எம் ஜி ஆர் மக்கள் கட்சி சார்பில் தென்காசி மாவட்ட ஆட்சியாளருக்கு மீண்டும் மேல்முறையீடு செய்து 22|06|2020 அன்று அரசு கவன ஈர்ப்பு போராட்டம் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறும் என்று அறிவிப்பு செய்த பின்பு தென்காசி கால்நடை உதவி இயக்குனர் அலுவலக சுவரில் மீண்டும் நீக்கப்பட்ட இடத்தில் தேசிய தலைவரின் போட்டோ வரிசையாக மாட்டப்பட்டது ஏதோ கால்புணர்ச்சி காரணமாக துவேசமாக செயல்பட்டு அலுவலக ஊழியர்கள் மத்தியிலும் பொது மக்கள் மத்தியிலும் பொது அமைதியை கெடுக்கும் விதத்தில் திட்டமிட்டு செயல்பட்ட தென்காசி கால்நடைபராமரிப்பு துறை உதவி இயக்குனர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் இந்த அதிகாரி இதே இடத்தில் தொடர்ந்து இதுபோன்ற பணி செய்தால் மேலும் இது போன்ற குற்ற செயல்கள் நடைபெற இவர் காரணமாக கூடும் எனபதால் மக்களின் பொது அமைதியை கருத்தில் கொண்டு இவரை பணியிடம் மாற்றம், பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் எனறு எம் ஜி ஆர் மக்கள் கட்சி 22|06|2020 அன்று தென்காசியில் அரசு கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த உள்ளது என்று கட்சியின் நிறுவனர் மேஜர் ரவிக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தென்காசி மாவட்ட செய்தியாளர்
கோவிந்தராஜ்
No comments:
Post a Comment