தமிழக காவல்துறை யார் கட்டுப்பாட்டில் உள்ளது

தமிழக காவல்துறை யார் கட்டுப்பாட்டில்?


தியாகராசபுரம் திருப்பதி பதிவிலிருந்து,


தமிழக காவல்துறை யார் கட்டுப்பாட்டில்?


பெண் பத்திரிக்கையாளர்கள் படுக்கையை பகிர்ந்து கொண்டுதான் பதவிகளை பெறுகிறார்கள், மாணவர்கள் சைட் அடிக்கத்தான் போராட்டம் நடத்துகிறார்கள்- எஸ்.வி.  சேகர்.


எங்களுக்கும் சோடா பாட்டில் வீசத் தெரியும். வில்லிப்புத்தூர் ஜீயர்.


கோர்ட்டாவது ம........வது, மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த வேண்டும். நானும் ரவுடிதான், வைகோ நடமாடமுடியாது.... எச். ராஜா.


வைரமுத்துவின் தலையை வெட்ட வேண்டும்.- நயினார் நாகேந்திரன். 


வடநாட்டு பா.ஜ.க. தலைவர்களின் அசிங்கமான பேச்சுக்கள் தனி. 


இப்படியான நாராச பேச்சுக்களை  பா.ஜ.க.வின் தலைவர்கள் பேசினார்கள் என்பது சாதாரண மக்களுக்கே தெரிந்த நிலையில் காவல்துறைக்கு தெரியாமலா போய்விட்டது?


"மோடியையும் அமித்ஷாவையும் சோளிய முடிப்பீங்கன்னு எதிர்பார்த்தேன்" என பேசியது தவறானது. மாற்றுக் கருத்தில்லை.


தனது பேச்சு மதவெறி சக்திகளை ருத்ரதாண்டவம் ஆடச் செய்யும் என்ற உளவியல் புரியாமல் அவர்  பேசியது ஆச்சரியமாக இருக்கிறது. 


ஆனால் மேற்படி பேச்சுக்கு அவர்களை ஏன் கைது செய்யவில்லை? என்ற கேள்வியை சாமானியன் கேட்கிறான். பதில் உண்டா? 


பா.ஜ.க.போராடினால் அதன் தலைவர்களிடம் கெஞ்சுவதும், மற்ற கட்சியினர், இயக்கத்தினர் மீது தாக்குதல் தொடுப்பதும் ஏன்? 


அதனால்தான், தமிழக காவல்துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? பி.ஜே.பி.யின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்ற சந்தேகம் வலுப்பெறுகிறது.


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...