நெல்சன் மண்டேலா..
தன் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பற்றி இவ்வாறு எழுதுகிறார் :
நான் தென் ஆப்பிரிக்காவின் அதிபரான பின் ஒரு நாள், எனது பாதுகாவலர்கள் சிலருடன் உணவு அருந்துவதற்காக ஒரு உணவு விடுதிக்குச் சென்றிருந்தோம்.
எங்களுக்குத் தேவையான உணவுகளைக் கொண்டு வர வெயிட்டரிடம் கூறினோம்.எங்களுக்கான உணவு வந்த போது, நான்,ஒரு மனிதன் மற்றொரு டேபிளில், தன் உணவுக்காகக் காத்திருப்பதைப் பார்த்தேன்.
நான் என் அருகில் இருந்தவரிடம், அந்த மனிதனையும் நம்முடன் சேர்ந்து உணவருந்த வருமாறு அழைக்கக் கூறினேன்.
அந்த மனிதரும் தனது உணவுடன் வந்து என் அருகில் அமர்ந்தார். நான் அவரையும் உணவருந்தக் கூறினேன்.
அவரும் மிகவும் நடுங்கியவாறே, தனது உணவை அருந்தி முடித்து அங்கிருந்து சென்றார்.
எனது காவலர்களில் ஒருவர், "அந்த மனிதர் ஒரு நோயாளியாக இருப்பார் போலிருக்கிறது, மிகவும் நடுங்கியவாறே இருந்தார்" என்றார்.
"அப்படி எல்லாம் இல்லை" என்றேன் நான்.
"நான் அடைக்கப்பட்டிருந்த சிறையில் ஒரு guard ஆக அந்த மனிதர் இருந்தார்.
நான் சிறையில் பல முறை சித்திரவதை செய்யப் பட்டிருக்கிறேன்.
அப்போது நான், "எனக்கு சிறிது தண்ணீர் வேண்டும்" என பல முறை கத்தியிருக்கிறேன்.
அப்போதெல்லாம் இந்த மனிதன் வந்து, என் தலை மீது சிறுநீர் கழித்துள்ளார்.
அதனால் தான் அவர் என்னைப் பார்த்தவுடன் பயந்து நடுங்கினார்.
குறைந்த பட்சம், அவர் என்மீது செய்த செயலைப் போல நான் அவரிடம் செய்வேன், அல்லது சிறையில் அடைத்து சித்திரவதை செய்வேன் என எதிர் பார்த்தார்.
ஏனென்றால் நான் தற்போது தென் ஆப்பிரிக்காவின் அதிபராக உள்ளேன். ஆனால் இது என் குணமோ அல்லது என் கொள்கையோ இல்லை.
சகிப்புத்தன்மை உள்ள மனப்பான்மைதான் நல்ல தேசத்தை உருவாக்குகிறது.
பதிலடி கொடுக்கும் மனநிலை தேசத்தையே அழிக்கிறது...
தேசிய மக்களாட்சி
No comments:
Post a Comment