ஒவ்வொரு பாட்டிலுக்கும் கூடுதல் விலை டாஸ்மார்க் அடிக்கிறது ஜாக்பாட் ஊழல்

ஒவ்வொரு பாட்டிலுக்கும் கூடுதல் விலை!
 டாஸ்மார்க் அடிக்கிறது ஜாக்பாட் ஊழல்



கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான டாஸ்மாக் பார்களில்  நடப்பது. மக்கள் உரிய அதிகாரிகளிடம் களிடம் வாய்மொழியாக புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.அரசு சொல்படி படி படியாக பார்களை இதுவரை எங்கும் குறைக்கவில்லை மாவட்டம் முழுவதும். 
 டாஸ்மார்க் ஊழியர் நம்மிடம்  தெரிவித்தது:


 வெளியில் தெரியாத சமாச்சாரங்கள் எவ்வளவு இருக்கின்றன என்று குமுறி தீர்த்துவிட்டார்.


  குவாட்டருக்கு ரூபாய் 5 ஆப் மற்றும் புல்லுக்கு ரூ10 என ஒவ்வொரு  பாட்டிலுக்கும் கூடுதல் விலை வைத்து விடுகிறோம் அதனால் முகத்திற்கு நேராக குடிமகன்கள் எங்களை திட்டுவது கொஞ்சநஞ்சமல்ல. ரேட்டை கூட்டி விடுகிறாயே! அதற்கு பதிலாக நாலு வீட்டில் பிச்சையெடுத்து பிழைக்கலாம் இல்ல! நீங்க எல்லாம் எங்கே திருந்த போறீங்க! போங்கடா !போங்க! 5ரூபாய் 10 ரூபாய் என உங்களுக்கு வாய்க்கரிசி போட்டு தொலைக்கிறோம் என்று அவரவர் பாணியில் தினுசு தினுசாக வசை பாடுகிறார்கள். முடிந்த அளவுக்கு பொறுமை காப்போம் சில நேரங்களில் டென்ஷனில் தலை சூடாகி விட்டால் என்னமோ பெருசா லஞ்சம் கொடுத்து மாதிரி பேசுறீங்க மற்ற அரசு அலுவலகங்களில் கொடுப்பதெல்லாம் கேள்வியா கேக்குறீங்க ! என்று பதிலுக்கு  எகிறி அடங்குவோம்.


  சுளையாக அரசு ஊதியம் பெறுபவர்கள் கூட தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு இருப்பதாக வீதிக்கு வந்து போராடுகிறார்கள். அவர்கள் பக்கம் நியாயம் இருக்கலாம் அதே நேரத்தில் கூடுதல் விலைக்கு விற்று அநியாயம் செய்வதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் எங்கள் தரப்பு நியாயத்தை கேட்பதற்கு தான் யாருமில்லை..


 2003 நவம்பர் 29 இல் தமிழ்நாடு  வாணிப கழகத்தின் கீழ் டாஸ்மார்க் தொடங்கப்பட்டது. 15 வருடங்களுக்கு மேல் கடந்துவிட்டன. அதிகபட்சமாக ரூபாய் 7000முதல் 10,000 ரூபாய் சம்பளத்தை வைத்து எப்படி குடும்பம் நடத்த முடியும்? அதே நேரத்தில் தீபாவளி, போன்ற பண்டிகை நாட்களிலும் கூட நாங்கள் வேலை பார்த்தாக வேண்டும். பண்டிகை நாட்கள், மெடிக்கல் லீவ் எதுவும்  இல்லை.


 மத்திய,மாநில தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து மதுக்கடைகள் உச்ச நீதிமன்ற உத்தரவால் மூடப்பட்டன.சாலையில் இருந்து 500 மீட்டர் தொலைவிற்கு மதுக்கடைகள் இருக்கக்கூடாது என்பதால் சாலையிலிருந்து 1 கிலோ மீட்டர் தள்ளி சுடுகாட்டில் கூட புதிதாக மது கடைகள் கட்டப்பட்டன முன்பெல்லாம் டாஸ்மார்க் கடையை வாடகைக்கு விடுபவர் ஒரு தொந்தரவும் தந்ததில்லை. தற்போது  ஒரு சில இடங்களில் ரூபாய் 1லட்சத்திற்கு டாஸ்மார்க் சரக்கு விற்றால் கட்டிட உரிமையாளர் ரூபாய் 500 கேட்கிறார். விற்பனையின் அடிப்படையில் ஒவ்வொரு லட்சத்துக்கும் அவர்களுக்கு ரூபாய் 500 வீதம் தந்தாக வேண்டும் வாடகை என அரசாங்கம் தருவதோ  1000 ,1500 ரூபாய் வரைதான்,மின் கட்டணமும் அப்படிதான் டாஸ்மாக் கடைக்கு 3000 ரூபாயிலிருந்து 4000 ரூபாய் வரை கரண்ட் பில் வருது, அரசாங்கமோ 2003 இல் இருந்த மின்கட்டண விகிதப்படி 2000,3000 தான் தருகிறது.


மது பாட்டில்களை வாகனத்தில் இருந்து இறக்கும் போது உடைந்து டேமேஜ்  ஆகி விட்டாளோ, எண்ணிக்கை குறைந்தாலும் அதற்கும் நாங்கள் தான் பொறுப்பு.


 மேலும் பாட்டிலுக்கு  ரூபாய் 5, 10 என அதிகம் வைத்து விற்று ஸ்குவாட்டிம் மாட்டினால் பைன் போட்டுவிடுவார்கள். மாதம் 2அல்லது 3 தடவை ஸ்குவாட் வந்துவிடும். இதில் என்ன கொடுமை என்றால் ஏறக்குறைய அதிகாரிகள் அனைவருக்கும் ரெகுலராக மாமுல் கொடுத்துவிடுவோம். இதில் ஒரு சில இடங்களில் காவல்துறைக்கும் மாமுல் வழங்கப்படுகிறது.


 மிகக் குறைந்த தொகுப்பூதியம் என்பதால் வங்கியிலும் கூட இந்த சம்பளத்துக்கு எப்படி லோன் தரமுடியும் என்று எங்களை நிராகரித்து விடுகின்றனர் மேலே  கூறியிருக்கும் அத்தனை செலவுகளையும் நாங்களே தான் பண்ணவேண்டும் அரசாங்கம் தரவே தராது இத்தனை கஷ்டங்களையும் சமாளிப்பதற்காக தான் குறிப்பிட்ட மேல் அதிகாரிகளையும் கவனிப்பதற்காக தான் ரூபாய் 5 லிருந்து 10 ரூபாய் வரை கூடுதலாக விலை வைத்து விற்கிறோம். அதேநேரத்தில் இந்த முறைகேடான செயலில் ஈடுபடும் எங்கள் கை சுத்தமானது என்று கூறிவிடமுடியாது இந்த ஊழல் பணத்திலிருந்து நாங்களும் நாள் ஒன்றுக்கு ரூபாய் 500 வரை பங்கு போட்டுக் கொள்கிறோம்.


 இப்போது சொல்லுங்கள் மிக குறைந்த சம்பளம் வழங்கி அடிமைகளைப் போல இஷ்டத்துக்கும் ஆட்டுவித்து குடிப்பழக்கம் உள்ள பொதுமக்களிடமிருந்து தவறான வழியில் பணம் பறிக்கின்ற வர்களாக ஆக்கியது தவறான ஊழல் அதிகாரிகளால் தான் என்று குமுறி தீர்த்தார் அந்த நபர்..


 இன்றைக்கு தமிழகத்தின் முக்கிய வருவாய் கொழிக்கும் துறையாகவே டாஸ்மார்க் மாறிவிட்டது அதேபோல் ஊழல் புரையோடும் துறையாகவும் இருப்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் வெளிப்படையாகவே தெரியும் ஆனால் அது பற்றி சிந்திக்காமல் குடிமகன்கள் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி ரசீது கொடுக்கிறார்களா, மதுபாட்டில்கள் மீது அச்சிடப்பட்ட தொகையை மட்டுமே வசூலிக்கிறார்களா, என்பது பற்றி கண்டுகொள்வதில்லை. ஒரு பாட்டிலுக்கு  ரூபாய் 5 ,10 என கூடுதலாக வசூலிப்பது சாதாரணமாகிவிட்டது. ரசீது வழங்குவது தொடர்பாக பலமுறை அறிவிப்புகள் வெளியான போதும் எந்த டாஸ்மாக் கடையிலும் மது பாட்டிலுக்கு ரசீது வழங்கப்படுவதில்லை.


 இதுதொடர்பான சுற்றறிக்கையில் விற்பனையாளரின் கையெழுத்துடன் ரசீது வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டது ஆனால் குடிமக்களுக்கு வழங்கியதாக போலியாக ரசீது பதிவு செய்து விற்பனையாளர்கள்  சமர்ப்பிப்பதாக கூறப்படுகிறது.


இந்நிலையில் டாஸ்மார்க் ரசீது எப்படி இருக்கும் என்பதை பார்த்ததே கிடையாது என்கின்றனர் குடிமகன்கள்..
"குடி நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு"
"குடி குடியை கெடுக்கும் "
"மது/மாது/புகைபழக்கம் உடல் நலத்திற்கு அழிவு"


-  சமூக ஆர்வலர் 
இ.கோபால் ஆபரன் கடலூர்.


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...